ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அரிசியை எரிபொருளாக பயன் படுத்துவதா ? மத்திய அரசின் அக்கிரமம் ..

Subramanian Ramakrishnan : அரிசியை பெட்ரோலில் கலப்பதா?
கார்ப்பரேட் லாப வெறிக்காக மக்களின் வாழ்க்கையைப் பலியாக்காதே:
சிபிஎம் கண்டனம்
புதுதில்லி, ஏப்.24- கார்ப்பரேட்டுகளின் லாப வெறிக்காக, மக்களின் வாழ்க்கையைப் பலியாக்காதே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. 

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசு, தன்னுடைய இருப்பில் அபரிமிதமாகக் குவிந்து கிடக்கும் அரிசியை உயிரிஎரிபொருளாக (bio-fuel)ப் பயன்படுத்து வதற்கும், சுத்திகரிப்பு சாதனங்கள் (sanitizers) உற்பத்தி செய்வதற்கும் உபயோகப்படுத்திட, மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் முடிவு எடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு, கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
அரசின் இந்த முடிவு, சமூக முடக்கத்தின் விளைவாக அரிசி கிடைக்காது பசி-பஞ்சம்-பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள், முறைசாராத் தொழி லாளர்கள் மற்றும் ஏழை மக்களின் முகத்தில் ஓங்கி அறையக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.


தங்கள் இருப்பில் உள்ள அபரிமிதமான அரிசியைத் தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பத் திரும்ப கூறி வந்தபோதிலும், அவற்றை மாநில அரசாங்கங்கள் மூலமாக பொது விநியோக முறையில் மக்களுக்கு வழங்கிட மத்திய அரசு முன்வரவில்லை.
உணவு தான்யங்கள் என்பவை மக்களுக்கான வையே தவிர, எத்தனால் தயாரிப்பதற்கானது அல்ல.
இதனை ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை ஸ்தாபனமும் தெளிவாகக் கூறி யிருக்கிறது.
சமூக முடக்கத்தின் காரணமாக பெட்ரோலில் இயங்கும் அநேக வாகனங்கள் சாலைகளில் ஓடாமல் இருக்கக்கூடிய இத்தருணத்தில், பெட்ரோலின் விலை சர்வதேச சந்தையில் வரலாற்றில் மிகவும் மலி வாகப் போயிருக்கக்கூடிய இத்தருணத்தில், மத்திய அரசாங்கம் மதிப்பு மிக்க அரிசியை பெட்ரோலில் எத்தனால் கலப்பதற்காகப் பயன்படுத்திட முடிவெடுத்திருப்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
எண்ணெய் இறக்குமதிகளின் கட்டணம் குறைந்திருக்கின்றன. உள்நாட்டிலும் அவற்றின் பயன்பாடு உபயோகப்படுத்தப்படாமல் உபரியாக இருக்கி றது.
இந்நிலையில் சுத்திகரிப்பு சாதனங்களுக்குத் (sanitizers) தேவைப் படும் ஆல்கஹால் உற்பத்தி செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் .
அதனைச் செய்திடாமல், கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, பசி-பஞ்சம்-பட்டினியுடன் தங்கள் ஜீவாதாரமான வாழ்க்கைக்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் கோடா னுகோடி மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்குத் தங்குமிடங்கள் இல்லாததையும், அவர்களின் இயல்பு வாழ்க்கைப் பறிக்கப்பட்டிருப்ப தையும், பலியாக்கிட முடியாது.
இது கிரிமினல்தனமானதாகும்.

கருத்துகள் இல்லை: