சனி, 2 மே, 2020

சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் .. வீடியோ


updatenews360.com :சென்னை : சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி வழங்கக்கோரி, சென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மே 3-க்கு பிறகு சொந்த ஊர் செல்லலாம் என்ற எண்ணம் கேள்விக்குறியானது. ஆனால், வெளி மாநிலங்களில் இருப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் கிண்டி, வேளச்சேரி, முகப்பேறு ஆகிய பகுதிகளில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்தபடி, தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, பல்லாவரம் பகுதியில் வெளிமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசாரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். ஏற்கனவே சென்னை கொரோனாவால் ஸ்தம்பித்துள்ள நிலையில், வெளி மாநில தொழிலாளர்கள் கூட்டமாக கூடியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: