

கிம் ஜாங் உன்னின் தாத்தாவின் 108 ஆவது பிறந்த நாள்விழாவில் அவர் கலந்து கள்ளவில்லை. இதிலிருந்து அவரது உடல்நிலை குறித்த வதந்திகளும் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கின.
இந்த பிறந்த நாள் விழா அந்நாட்டு நாள்காட்டியில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியிலேயே கிம் கலந்து கொள்ளாததால் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்தது.
இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அண்டை நாடான தென்கொரியாவோ அந்த நாட்டில் நடப்பதை பார்த்தால் கிம்மிற்கு உடல்நிலை மோசமாக இருப்பது போன்ற அசாதாரண சூழல் நிலவவில்லை என தெரிவித்தது. இதையே சீனாவும் தெரிவித்தது.
ஊடகங்கள்
நன்றாக இருக்கிறார்
கிம்மின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அது குறித்து கண்காணித்து வருவதாகவும் அமெரிக்காவின் உளவுத் துறை கூறியது. அது போல் மற்றொரு உளவுத் துறை அதிகாரி கூறுகையில் கிம்மின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வது அத்தனை சுலபமில்லை. அந்த நாட்டில் அதிபர் தொடர்பான ரகசியங்களை ஒருரும் கசியவிடமாட்டார்கள் என தெரிவித்தார். பின்னர் அண்மைக்காலமாக வடகொரியாவில் அசாதாரண சூழல் நிலவுவது போன்ற எந்த வித நடவடிக்கையும் தெரியவில்லை என அமெரிக்க புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக