வியாழன், 30 ஏப்ரல், 2020

H- ! B visa அமெரிக்காவில் இருந்து இரண்டு லட்சம் பேர் வெளியேறவேண்டும் ..


தினமலர் : வாஷிங்டன்:'ஹெச் - -1பி' விசா வாயிலாக, அமெரிக்காவில் பணியாற்றி வரும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள், தங்கள் வேலையை இழந்த காரணத்தால், ஜூன் மாத இறுதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.;
கடும் பாதிப்புபல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வெளிநாட்டினர், அமெரிக்கா சென்று பணியாற்ற, ஹெச்- - 1பி எனப்படும் விசா வழங்கப்படுகிறது. பெரும்பாலும், கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்தவர்கள், இந்த விசாவில் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலால், அமெரிக்கா கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் வேளையில், அங்கு லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர். பல்வேறு துறைகளிலும், ஊதிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக, ஹெச் -- 1பி விசாவில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.


அமெரிக்க குடியுரிமை விதிகளின்படி, ஹெச் - -1பி விசாவில் பணியாற்றுவோர், வேலை இழந்தால், 60 நாட்களுக்குள், வேறு வேலையில் சேர வேண்டும்
தவறும் பட்சத்தில், அமெரிக்காவில் வசிக்க சட்ட ரீதியிலான தகுதியை, அவர்கள் இழக்க நேரிடும். இதனால், சம்பந்தப்பட்ட நபர், உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.கொரோனா பாதிப்பால், ஹெச் - -1பி விசாவில் பணியாற்றும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், கடந்த மார்ச்சில் வேலை இழந்தனர்.

இவர்கள், ஜூன் மாதத்திற்குள் வேறு வேலையில் சேராவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகி உள்ளது.தற்போது, சர்வதேச அளவில், பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், புதிய வேலையில் உடனடியாக சேர முடியாது.எனவே, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெச் - -1பி விசா ஊழியர்கள், வரும் ஜூன் மாதம், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகி

கருத்துகள் இல்லை: