தினத்தந்தி : ரூ.1000 விலையில் செப்டம்பர் மாத இறுதியில் கொரொனா தடுப்பூசி விற்பனைக்கு வரும் என மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி: செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி விற்பனைக்கு வந்து விடும் என்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவன தலைவர் கூறி உள்ளார். இதன் விலை சுமார் ரூ .1,000 இருக்கும் என்று அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதார் பூனவல்லா கூறியதாவது:- மே மாத இறுதிக்குள் நாங்கள் உற்பத்தியைத் தொடங்கி விடுவோம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். இந்தியாவுக்கும் உலகத்துக்கும் கொடுக்கக்கூடிய ஒரு தயாரிப்பு எங்களிடம் இருக்கும்.

பெரும்பாலான
விஞ்ஞானிகள் இரண்டு வருடங்கள் அல்லது குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு
முன்னர் ஒரு தடுப்பூசி சந்தையில் எதிர்பார்க்க முடியாது என கூறி உள்ளார்களே
நீங்கள் எப்படி குறுகிய கால அவகாசத்னதில் தடுப்பூசி கிடைக்கும் என
கூறுகிறீர்கள் என கேட்டதற்கு
பூனவல்லா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் கூட்டணி வைக்கும் வரை நீண்ட காலம் எடுக்கும் என கருதினோம்
தடுப்பூசி
உற்பத்திக்கு கோடஜெனிக்ஸ் மற்றும் பிற அமெரிக்க கூட்டாளர்களுடன் இருந்த
2021 வரை எடுக்கும் என்று நாங்கள் கூறியுள்ளோம், ஆனால் அதற்குப் பிறகு
என்ன நடந்தது என்றால் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகத்துடன் நாங்கள் இணைந்தோம் இது நிறைய முன்னேற்றம் அளித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு
அணி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எபோலா வைரஸுக்கு தடுப்பூசி கொண்டு
வருவதில் வெற்றி பெற்றது. மலேரியா தடுப்பூசிக்கு எங்கள் நிறுவனம்
அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆக்ஸ்போர்டைத்
தவிர,எனது நிறுவனம் அமெரிக்க நிறுவனமான கோடஜெனிக்ஸுடனும் ஒரு ஒப்பந்தம்
செய்துள்ளது. இது அதன் தடுப்பூசியை உருவாக்க ஒரு நேரடி அட்டென்யூட்டட்
வைரஸைப் பயன்படுத்துகிறது. அதனுடன் விலங்கு சோதனைகளை நடத்தி வருகிறது ஆனால்
இது ஆக்ஸ்போர்டுக்கு இரண்டு மாதங்கள் பின்னால் உள்ளது.
சுமார் ரூ.1000 விலையில் சந்தையில் தடுப்பூசி கிடைக்கும். ஒரு துல்லியமான புள்ளிவிவரம் விரைவில் வழங்கப்படும் என கூறினார்.
ஆக்ஸ்போர்டின்
தடுப்பூசியின் மனித சோதனை - உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்டஇடங்களில்
நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 23 அன்று மனிதர்களுக்கு செலுத்தும்
பரிசோதனை தொடங்கியது. ஏழு பேரிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்தபட்டது.
அவற்றில் சில சீனா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக