புதன், 29 ஏப்ரல், 2020

மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியா


USCIRF ✔ @USCIRF  Countries of Particular Concern in #USCIRFAnnualReport2020: Burma, China, Eritrea, India, Iran, Nigeria, North Korea, Pakistan, Russia, Saudi Arabia, Syria, Tajikistan, Turkmenistan, and Vietnam
தினத்தந்தி :மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் வைக்கபட்டத்தற்கு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய ஆணையத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி   சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளது அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. மத சுதந்திரத்தை மீறும்  நாடுகள் என பர்மா, சீனா, எரித்ரியா, இந்தியா, ஈரான், நைஜீரியா, வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் என 14 நாடுகளை பட்டியலிட்டு உள்ளது. சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் செயலற்ற நிலைக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்டது தான் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம். இதன் பரிந்துரைகள் வெளியுறவுத்துறைக்கு கட்டுப்படாதவை ஆகும்
2004 முதல் முதல் முறையாக பாகிஸ்தான், சீனா, வட கொரியா உள்ளிட்ட 14 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்து உள்ளது.


மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடு என்று பரிந்துரைத்த அரசாங்கங்கள் திட்டமிட்டு மதசுதந்திர மீறல்களில் ஈடுபடுகின்றன. மத சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்முறை பற்றிய நாடு தழுவிய பிரச்சாரங்களுக்கு தண்டனையற்ற நிலையை அரசுகள்  உருவாக்கி வருகின்றன. மத சுதந்திரத்தை கடுமையாக மீறியதற்கு  இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் எடுக்க வேண்டும்.

2019 ஆம் ஆண்டில், மே மாதம் பாரதீய ஜனதா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் இந்தியா முழுவதும், குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக  மத சுதந்திரத்தை மீறும் தேசிய அளவிலான கொள்கைகளை நடைமுறைபடுத்தி வருகிறது.

பிப்ரவரி 2020 இல், டெல்லியில் மூன்று நாட்கள் வன்முறை வெடித்தது,  முஸ்லீம் பகுதிகள் தாக்கப்பட்டது. டெல்லி போலீஸ் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்பட்டு, தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது மற்றும் வன்முறையில் நேரடியாக பங்கேற்றது போன்ற தகவல்கள் வந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதற்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்து உள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறும் போது

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) ஆண்டு அறிக்கையில் இந்தியா குறித்த குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான அதன் பக்கச்சார்பான மற்றும் ஒருதலைபட்சமான கருத்துக்கள் புதிதல்ல. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், அதன் தவறான கருத்து புதிய நிலைகளை எட்டியுள்ளது. அமைப்பிற்கான கொள்கைகளில் அதன் கமிஷனர்களை கொண்டு செல்ல முடியவில்லை. நாங்கள் அதை ஒரு குறிப்பிட்ட அக்கறை கொண்ட ஒரு அமைப்பாக கருதுகிறோம், அதற்கேற்ப அதை நடத்துவோம் என கூறி உள்ளார்.

இந்த ஆணையத்தில் உள்ள ஒன்பது உறுப்பினர்களில் இருவர், இந்தியாவை இந்த பட்டியலில் வைக்க பரிந்துரை செய்ததில் கருத்து வேறுபாடு தெரிவித்தனர், மூன்றாவது உறுப்பினர் இந்தியா குறித்து தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தினார் என்று செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

சீனா, வட கொரியா போன்ற சர்வாதிகார ஆட்சிகளைப் போலவே இந்தியாவும் அதே வகையைச் சேர்ந்தது அல்ல. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இங்கு குடியுரிமை திருத்தச் சட்டம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் எம்பிக்கள், சிவில் சமூகம் , மற்றும் பல்வேறு குழுக்கள் முன் பகிரங்கமாக வைக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது என கமிஷனர் டென்ஜின் டோர்ஜி கூறினார்

கருத்துகள் இல்லை: