ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

ஜோதிகாவின் சக்திமாசாலா ஒப்பந்தம் நிறுத்தம் ..

வளன்பிச்சைவளன் : சக்தி மசாலா ஜோதிகாவை விளம்பரப் படத்தில் இருந்து நீக்கியதாக சங்கிகள் கும்மாளம் 
புதிய  கல்விக் கொள்கை நீட் தேர்வை எதிர்த்தவர் சூர்யா சங்கிகளின் வன்மம் ஏன்? வரலாறு சில படிப் பினைகளை சுட்டும். ஆண்டா ண்டு காலமாக கல்வி கற்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே மற்றவர்கள் கல்வி கற்பது பாவம் மீறி கல்வி கற்றால் சுடு கோலால் நாவை ச்சுடு, காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என கொடிய அடக்குமுறைகளால் மற்றவர்களிடம் இருந்து கல்வியை அபகரித்து சுக வாழ்வு வாழ்ந்த சமூகம்.
யாகங்களால் பெரும் பயனடைவீர் என அரசர்களிடம் கூறி யாகம் செய்வதற்காக பிரம்மதேசயங்களை தானமாக பெற்று, சில நிகழ்வுகளுக்கு பரி காரம் செய்தல் வேண்டும் என்று கூறி அரசர்களை தங்களுக்கு பொன்னும் பொரு ளும் தானமாக தர வைத்து சுக வாழ்வு வாழ்ந்த சமூகம் பற்றிய உண்மைகளை அறிவது இன்று அவசியமாகிறது.
சூர்யா ஜோதிகா மீது வன்மம்

ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் கல்வி தங்களுக்கு மட்டுமே. தானங்கள் தங்களுக்கு மட்டுமே என இதற்கு ஏகபோக உரிமை உள்ளவர் கள் தாங்களே என எண்ணி செயலாற்றுகையில் தங்களின் இந்த இரண்டையும் அசைத்து மிக சாமான்யர்களு க்கு உயரிய கல்வி அளித்தது அவர்களின் கோபத்தை கிளறி யது. தானங்கள் தங்கள் காப் புரிமை என்ற எண்ணத்திற்கு மாற்றாக தானம் தர வேண்டிய இடங்கள் அரசுப் பள்ளிகள், பொது அரசு மருத்துவமனைகள் என மக்களின் தானச் சிந்தனை யை வேறு பகுதிகளுக்கும் திருப்ப அறிவுறுத்தியது அவர்களை ஆத்திரத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது.
சக்திமசாலா.
சக்தி மசாலா விளம்பர படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார் இதில் கிடைக்கும் வருவாய் முழுவதும் அகரம் அறக் கட்டளைக்கே என அறிவித்து கடந்த ஆண்டுகளில் செயல் படுத்தி வருகிறார் இதன் மூலம் சாமான்யர்களது பிள்ளைகளின் உயர் கல்வி கனவை நனவாக்க வருகிறார்
சங்கிகள் இன்று கும்மாளமிடு வதை காண்கிறோம் ஏன்? சாமான்யர்கள் உயர் கல்வி கற்கும் வழிக்கான வருமானத்தை சிதைத்து விட்டதாக கும்மாளம் இடுகின்றனர். மற்றவர்கள் கல்வியே கற்க கூடாது என்ற உயரிய சிந்தனையின் அடிப் படையில் தற்போது இதை முட க்கி விட்டதாக பெருமை கீற்று பவர் கல்வி மறுக்கப் பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் இத்தகைய அறிவீணர்கள் தான் அவர்கள் பலம்
சக்தி மசாலா நிறுவனம் எந்த முறையான அறிவிப்பும் வெளியிட வில்லை மேலும் சக்தி மசாலா உரிமை யாளர் சிவக்குமார் உறவினர்.
சூர்யா பகிரங்கமாக புதிய கல்வி கொள்கையை எதிர்த்தவர் அரசுக்கு பத்து கேள்விகள் என இது எப்படி சாமான்யர், கிராமபுற மக்களுக்கு எதிரானது என மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தியவர் நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தவர். சாமான்ய கிராமபுற மக்களின் உயர் கல்விக்கு ஊக்கம் அளித்தவர்.
இவை தான் அவர்களின் இரண்டு முக்கிய சொத்து கல்வி, தானம் இந்த இரண்டையும் அசைக்க ஜோதிகா, சூர்யா முயன்றதாக அவர்கள் மீது வன்மத்தை கக்கு கின்றனர்
இன்றைய நிகழ்வுகள் இவர்கள்   சாமான்யமக்களின்
கல்விக்கு அவர்கள் உயர்விற்கு எதிரானவர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
திருமதி ஜோதிகா சூர்யா மீது வைக்கப் படும் விமர்சனம் எப்படி கோவிலை பள்ளி, மருத்துவ மனைகளோடு ஒப்பி டலாம். அவர்கள் நினைவிற்கு பிரதமர் மோடி கழிவறை அவசியம் பற்றி சுட்டிக்காட்ட இன்றைய தேவை கழிவறைகளே! கோவில் அல்ல என்றாரே இதற்கு என்ன கண்டனம் சொல்லுங்கள். உங்களின் உண்மையான அக்கறை கோவில் மீது இருக்கு மானால் இதற்கு பொங்கி எழுந்து இருக்க வேண்டுமே நோக்கம் அது வல்லவே.
ஊரடங்கு நீட்டிப்பு சாமான்யர்களுக்கு உதவ இயலாமை, அரபு நாடுகளின் கண்டனம் இவர்கள் ஆளும் மாநிலங்களில் குஜராத் உட்பட எவ்வளவு மோசமான சுகாதார கட்டமைப்பு இந்த நிலையிலே சமாளிக்க இயலாமல் தடுமாறும் அவலம் மதுரை கொரோனா தொற்று இவர்கள் கட்டிய இஸ்லாமிய வெறுப்பு தகர்ந்து வருவதை எல்லாம் மறைக்க திசை திருப்ப இவர்கள் கையில் எடுத்து இருப்பது திருமதி ஜோதிகா சூர்யா எதிர்ப்பு
உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வோம்
We support SURYA & JOTHIKA

கருத்துகள் இல்லை: