செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

CoronaVirus உயிரிழப்பு 1000ஐ கடந்தது!


ns7.tv  :   நேற்று (திங்கள்) மட்டும் புதிதாக 2,478 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 1000ஐ கடந்தது.
சீனாவின் வுஹான் மாகானத்தில் முதல்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, சீனா மற்றும் இதர நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000ஐ கடந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 108 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸுக்கு இதுவரை முறையான தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில் அதன் பாதிப்பின் வரம்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இதுவரை 27 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் உலகம் முழுவதும் 43,000க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதியாகியிருக்கிறது. அதே நேரத்தில் வைரஸ் பாதிப்புக்குள்ளான 4,000 பேர் குணப்படுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: