செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

சீன கோடீஸ்வரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ...கொரோனா வைரஸ் பாதிப்பால் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

https://www.ccn.com/billionaire-whistleblower-wuhan-coronavirus-death-toll-is-over-50000/
Billionaire Whistleblower: Wuhan Coronavirus Death Toll Is Over 50,000. Exiled Chinese businessman Guo Wengui recently revealed leaks from Wuhan crematoriums. He claims based on the number of bodies their furnaces are burning, the death toll could be as high as 50,000. தினத்தந்தி  : சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டைசேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. 'கொரோனா வைரசால் தற்போது வரை, 908 பேர் உயிரிழந்துள்ளனர்.  40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்  என  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உகான் நகருக்குள் யாரும் நுழைய முடியாத படி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது.

;
தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். மேலும், 15 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீன அரசு இவை அனைத்தையும் மறைத்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சீன சுகாதாரத் துறை, 3.8 கோடி பேர் வசிக்கும் உகானில் 50 லட்சம் பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மூலமும் இந்த வைரஸ் பரவக் கூடும். அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ள நிலையில், குவோ வெங்கூய்யின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்  என சீன கோடீஸ்வரர் வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: