வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

நெல்லை ... மாணவிக்கு சரமாரி அடி.. பிரம்பு முறிந்து.. பிளந்த துண்டு முத்தரசி கண்ணில் பார்வை கேள்வி குறி

ஆதிநாராயணன் tamil.oneindia.com - hemavandhana.: நெல்லை: மாணவியை ஆசிரியர் அடித்த அடியில் அந்த பிரம்பு முறிந்து... பிய்ந்து கொண்டு போய்.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த இருந்த இன்னொரு மாணவி முத்தரசியின் கண்ணை துளைத்து சென்றது.. முத்தரசியின் கண்ணிர் ரத்தமாய் வழிந்தது.. இப்போது பார்வை பறி போகும் அபாயத்தில் உள்ளார்!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன்... இவரது மகள் முத்தரசி... 10 வயது சிறுமி.. 5-ம் வகுப்பு படிக்கிறார்!
முத்துசெல்வன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பாட்டி வீட்டில்தான் முத்தரசி தங்கி படித்து வருகிறார்... கூடங்குளத்தில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளி... இதுதான் முத்தரசியின் ஸ்கூல்... ஆதிநாராயணன் என்பவர் இவரது கிளாஸ் வாத்தியார்!

சம்பவத்தன்று வழக்கம்போல ஸ்கூலுக்கு போனார் முத்தரசி.. ஆதிநாராயணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாணவியிடம் ஆதிநாராயணன் கேள்வி கேட்டார்... ஆனால் அந்த மாணவி பதில் சொல்லவில்லை.. அந்த பாடப்புத்தகத்தையும் வகுப்புக்கு கொண்டுவரவில்லை. இதனால் கோபடைந்த ஆதிநாராயணன் பிரம்பை எடுத்து அந்த மாணவியை அடித்துள்ளார்.

10 வயது பிஞ்சு என்றுகூட தெரியாமல் பிரம்புவால் விளாசி உள்ளார்... அந்த சமயத்தில் பிரம்பு முறிந்து பக்கத்தில் உட்கார்ந்த முத்தரசி கண்ணில் பட்டது. இதனால் முத்தரசி வலியால் அலறி துடித்தார்... கண்ணில் இருந்து ரத்தம் வந்துவிட்டது.. உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் வந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

;உடனடியாக முத்தரசியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு அழைத்து சென்றனர்.. சிகிச்சையும் உடனடியாக தரப்பட்டது.. ஆனால், முத்தரசியின் பார்வைக்கு டாக்டர்கள் கியாரண்ட்டி தரவில்லை... பார்வை பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.. எனினும், முதல் வேலையாக, முத்தரசிக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு, கண்ணில் சிக்கியிருந்த பிசிறு நீக்கப்பட்டு விட்டது.

 இந்த சம்பவம் தொடர்பாக சுயம்புகனி கூடங்குளம் போலீசில் முத்தரசியின் பாட்டி புகார் தந்தார்... விஷயம் கேள்விப்பட்டதும் முத்தரசியின் உறவினர்கள் ஸ்கூலுக்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர்... ஆசிரியர் ஆதிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... முத்தரசிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போலீசாரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்தனர்.

;ஆனால், ஆதிநாராயணன் இப்போது எஸ்.ஆகி உள்ளார்... தலைமறைவான அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்... நேற்று முன்தினம் துருதுருவென பள்ளிக்கு உற்சாகமாக சென்ற முத்தரசி, இன்று கண்ணில் கட்டு போட்டுக் கொண்டு வலியால் துடித்து வருவதை பார்க்கவே வேதனையாக உள்ளது!.. 2 நாள் கழித்து நிலைமை தெரிந்த பிறகு தேவைப்பட்டால் மேல்சிகிச்சைக்கு மதுரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுவார் என தெரிகிறது

கருத்துகள் இல்லை: