செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

துப்பாக்கியால் சுட சொன்னீங்களே.. துடைப்பத்தால் விரட்டியடித்து விட்டார்கள்.. பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

Delhi Assembly Election Result: prakash raj says about aam aadmi party win tamil.oneindia.com : சென்னை: "துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளார்கள் மக்கள்" என்று பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட்தான் சோஷியல் மீடியாவில் பற்றிக் கொண்டு வைரலாகிறது! காரசார ட்வீட் போடுவதென்றால் முன்னாடி வந்து நிற்பார் பிரகாஷ்ராஜ்.. அதுவும் பாஜகவுக்கு எதிரான ட்வீட் என்றால் அவருக்கு இன்னும் குஷியாகிவிடும். பாஜகவை விமர்சித்தும், சுட்டிக்கட்டியும் பிரகாஷ்ராஜ் போடும் ட்வீட்கள் பல சர்ச்சையானவை! சில ட்வீட்கள் அதிகம் பேசப்பட்டவையும்கூட!
"அயோத்தி வீதியில் கஷ்டப்படும் ஏழை மக்களை பாருங்கள்" என்று பாஜக தலைவர்களுக்கு அட்வைஸ் செய்வார் பிரகாஷ் ராஜ்.. பிறகு, "இந்த தேசத்திற்கு தேவை 3000 கோடி செலவு செய்து வைத்த சிலை இல்லை..
தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயார் செய்வதை விட வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், அடிப்படை கல்வியறிவு கூட பெறாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யவேண்டும்" என்று வேண்டுகோளும் விடுப்பார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை டெல்லியில் தொடர உள்ளது... ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளே அக்கட்சிக்கு கிடைத்தும் விட்டது. ஆம் ஆத்மி வெற்றி குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், பிரகாஷ்ராஜும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
"சிஐஏ சட்டத்தை எதிர்த்து போராடியவர்களை துப்பாக்கியால் சுட சொன்ன பாஜக தலைவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டி உள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம் என்பது தெரிந்த விஷயம்தான்.. இருந்தாலும், பிரகாஷ்ராஜ் வேறு தொனியில் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளதுதான் திரும்பவும் பரபரப்பு கலந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: