செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

MyFinanza - Income and Expense Tracker.. தனிநபர் நிதிமேலாண்மை திறம்பட கையாள ஒரு மொபைல் செயலி

Karthikeyan Fastura : என் அப்பா என்பீல்டு நிறுவனத்தில் 16 ஆண்டுகள் வேலை செல்ல வேண்டிய சூழலுக்கு வந்து ஒரு கிரானைட் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். அடுத்த ஐந்து வருடங்கள் போராட்டமாக சென்றது. 2005க்கு பிறகு நான் வேலைக்கு சென்று ஓரளவிற்கு அவருக்கு உதவினேன்.
பார்த்து வெளியில் வந்தபோது ஒண்ணே கால் லட்ச ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்தது. வேலை பார்த்து மாதா மாதம் சம்பளம் வாங்கிய அவரால் ஒரு மிகப் பெரும் தொகை கிடைத்த போது அதை சரியாக முதலீடு செய்ய தெரியவில்லை. ரெம்பவும் சிக்கனமானவர். வரவு செலவு கணக்குகளை எழுதி வைப்பவர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். பத்து வருடங்கள் இந்த பணத்தை வைத்து பலசரக்கு கடை, தவணைக்கு கொடுத்தல் என்று பார்த்து எங்களை காப்பாற்றினார். அதன் பிறகு மீண்டும் வேலைக்கு
வரவு செலவு கணக்குகளை குறித்து வைத்துக் கொள்வது நாம் என்ன செலவு செய்கிறோம் நமக்கு என்ன வருவாய் வருகிறது, எதில் அதிகமாக செலவு செய்கிறோம் என்று தெளிவாக தெரிந்து கொண்டு நம்மை சரியாக வழிநடத்த உதவும். அப்படிதான் என் அப்பா எங்களை பாதுகாத்தார். அவருக்கு அந்த பழக்கம் இல்லையென்றால் மிகப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்போம்.
ஆனால் அது மட்டும் போதாது. அவர் சரியான வழிகளில் அளவில் முதலீடு செய்திருந்தால் இன்னும் பல்கி பெருகி இருக்கும். தனிநபர் நிதிமேலாண்மை என்பது வரவு செலவு அறிவதும் சிக்கனமும் மட்டுமல்ல. சரியான வழிகளில் முதலீடு செய்வதும், காப்பீடு செய்து கொள்வதும் என்று பல நிலைகள் இருக்கிறது. அவ்வப்போது அது மாறிக்கொண்டேவும் இருக்கிறது. அவற்றை அறிந்து கொண்டு நமது நிதி மேலாண்மையை இன்னும் மேம்படுத்திக் கொள்வதும் அவசியம்.

தனிநபர் நிதிமேலாண்மைக்கு என்று தமிழில் நல்லதொரு ஆப் கொண்டுவர வேண்டும் என்ற கனவு இன்று நிஜமாகி ஆப் வடிவெடுத்து கூகிள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளோம். இது வரவு/செலவுகளை குறித்து வைத்து உங்களுக்கு உங்கள் நிதிமேலாண்மையை படம் பிடித்து காட்டும். அதோடு மட்டுமல்லாமல் எந்த இடத்தில் நீங்கள் சரியாக செய்யவில்லை. அதை எப்படி செய்வது, யாரை தொடர்பு கொள்வது என்று தெளிவாக வழிகாட்டும். இதை மொபைலில் மட்டுமல்லாமல் இணையதளத்திலும் அதே அக்கௌன்ட்டில் சென்று பார்க்கலாம். தனிநபர் நிதிமேலாண்மையில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்களை உங்களுக்கு தெரிவித்துக்கொண்டேவும் இருக்கும். இது உங்களுக்கு கணக்காளர் மட்டுமல்ல நல்ல நிதி ஆலோசகராகவும் செயல்படும்.
இன்னும் பலநூறு வசதிகள் செய்ய வேண்டியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்திக்கொண்டே வருவோம். விளம்பரங்கள் எதுவும் இருக்காது. பாதுகாப்பானது. எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.அவ்வப்போது பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்திக்கொண்டே வருவோம். அதன் மூலம் இன்னும் எளிமையாக நம்பகமாக அறிவாக இந்த ஆப் செயல்படும்
பயன்படுத்தி பாருங்கள், நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். ஆங்கிலம், தமிழ், இந்தி என்று மூன்று மொழிகளில் இப்போது செயல்படுகிறது. விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் இது வெளிவரும். தனிநபர் நிதிமேலாண்மை திறம்பட கையாள எளிய மனிதர்கள் அனைவருக்கும் அவசியமான ஒரு மொபைல்செயலியாக இது இருக்கும். உங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றிகள் கோடி தெரிவித்துக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை: