
இந்த மோதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உயர்மட்ட அதிகாரிகள் அளவில் கடந்த 16ம்தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட 2 உயர் அதிகாரிகள் உள்பட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்கள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக