செவ்வாய், 16 ஜூன், 2020

கர்ம வீரர் காமராஜர் தமிழக நலன்களை விட்டு கொடுத்தாரா ?

Nilavinian Manickam : கர்ம வீரர் காமராஜர்  ஆட்சியில் தமிழ்நாடு  இழந்த எல்லைப் பகுதிகள்... தேவிகுளம் பிர் மேடு, நெய்யாற்றங்கரை ,   நெடுமங்காடு, பாலக்காடு, சித்தூர் , திருப்பதி, ; மூணாறு.!
இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் ஏற்பட காரணம்?....காரணம் காமராசர்தான்.
மார்ஷல் நேசமணி
ஊர்தோறும் தொழில்வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?
இப்படியொரு புகழாரத்தைக் காமராசருக்கு சூட்டியவர் யார் தெரியுமா.?
தந்தை பெரியார்தான்.
இருப்பினும் காமராசரிடம் எனக்கு சில கேள்விகள் உள்ளன....
காமராசரை நோக்கி கேள்விகள் என்றால் தனிப்பட்ட அவர் மேல் அல்ல.... அவருடைய அரசியலை நோக்கிய கேள்விகள்....
காமராசரைச் சுற்றியிருந்தவர்கள் ஏழை குப்பனோ சுப்பனோ அல்ல. மிட்டா மிராசுகளும் ஆலைய அதிபர்களும் தான்.
காமராசரின் ஆட்சியில் செல்வாக்குடன் விளங்கிய சில ஏழைகளின் பட்டியல் இதோ!
கபிஸ்தலம் மூப்பனார்
ஸ்ரீரங்கம் வெங்கடேச தீட்சிதர்
கல்வண்டார் கோட்டை சாமிநாதன்
வெண்மனி கொலைகாரன் இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
பக்கிரிசாமி நாயுடு
மதுரை சின்னக் கருப்பத் தேவர்
கவரப்பட்டு மாரியப்ப வாண்டையார்

கருப்பு அம்பலம் வெங்கடாசலத்தேவர்
ஜெகவீரபாண்டிய நாடார்
கும்பகோணம் ஏ ஆர் ராமசாமி
காளியண்ணன் கவுண்டர்
ராமசாமி கவுண்டர்
பொள்ளாச்சி மகாலிங்கம்
இராஜாராம் நாயுடு
என்.ஆர்.தியாகராசன்.........என லிஸ்ட் போஓஒஒஒய்க்கொண்டே இருக்கும்.
ஏழை எளிய மக்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள் இவர்கள். கடத்தல் பேர்வழிகளும் கள்ள நோட்டுக்காரர்களும் பிளாக் மார்க்கெட் பேர்வழிகள் தான் காமராசரின் பொற்கால ஆட்சியின் புரவலர்கள்.
காமராசர் கட்சியில் உண்மையான ஏழைப் பங்காளர்கள் என சொன்னால், கக்கன், பரமேஸ்வரன்கள் என மிகச் சிலரே!
நாடே கர்மவீரரை புகழும் போது நீ மட்டும் அவரது புகழைப் பழிப்பதால், பெரிய ஆளாக மாறிவிடுவாய் என எண்ணமா ?
கண்டிப்பாக இல்லை...அவரது ஆட்சியில் தமிழர்கள் இழந்த உரிமைகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கர்ம வீரரின் ஆட்சியில் நாம் இழந்த எல்லைப் பகுதிகள்...
தேவிகுளம்
பிர் மேடு
நெய்யாற்றங்கரை
நெடுமங்காடு
பாலக்காடு
சித்தூர்
திருப்பதி
மூணாறு.
திருவிதாங்கூரில் தமிழ் பேசும் மக்கள் அதிகமுள்ள வட்டங்களான
"தேவிகுளம், பீர்மேடு"
நீங்கலாக மீதமுள்ள பகுதிகள்
01.11.1956 அன்று தமிழகத்தோடு இணைக்கப்பட்டன.
இவ்விணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி தமிழர்கள் நேசமணி தலைமையில் "தமிழர் தாயகப் பகுதிகளை" மீட்பதற்கு மிகத் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வந்தனர்.
காமராசர் கேரள காங்கிரசுக்கு பரிந்து பேசுவதற்காக நேசமணியிடம் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுகோள் வைத்தார்.
வேண்டுகோள் என்பதைவிட எச்சரிக்கை செய்தார் என்பதே பொருத்தமாகும்.
A. Nesamani – Inside Travancore Tamil nadu....என்ற நூலில் நேசமணி கூறியதாக இப்படி பதிவுள்ளது.
“நாங்கள் போராட்டங்களை கை விட்டு விட்டு, மலையாள காங்கிரசான திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டுமெனவும், திருவிதாங்கூர் பகுதிக்குள்ளேயே ஒரு தமிழ்மாவட்டத்தை அமைத்து பிரச்னையை முடித்துக் கொள்ளுங்கள்.. என காமராசர் கூறினார்".
திருவிதாங்கூர் தமிழர்கள் நிலைமையை நேரில் கண்டும், தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் வேண்டுகோளை ஏற்று..
தமிழ்பகுதிகளைக் கொண்டு ஒரு வருவாய் கோட்டம் அமைத்து மலையாளிகளிடம் சேர்ந்து வாழச் சொன்னாரே தவிர, தாய் தமிழகத்துடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சொல்ல மனம் வரவில்லை.
தமிழ்ப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் குறித்து எதுவும் சொல்லாமலே காமராசர் இருட்டடிப்பு செய்ததை வரலாறு எப்போதுமே சொல்லிக்கொண்டு தான் இருக்கும்.
“முதல்வர் காமராசரை சந்தித்து தென் திருவிதாங்கூர் நிலைமையை விவரித்தேன். பிரதமருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டாம் தாணுவின் ஆட்சி நடத்தும் அடக்குமுறைக் கொடுமைகளை நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரை வற்புறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். திரு.காமராசர் எனக்கு நம்பிக்கை தரும் வகையில் பதிலளிக்க வில்லை...
தமிழர்கள் தேவையில்லாமல் தெற்கெல்லையில் கிளர்ச்சி செய்ததன் காரணமாகத்தான் இவ்வளவு நேர்ந்ததென்றும், அது தேவையற்ற கிளர்ச்சி என்றும் காமராசர் கூறினார்"....
(ம.பொ.சி. தனது சுயசரிதை நூலில்)
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழி. ஆனால் தமிழ்நாடு காங்கிரசுக்கு சதை கிடையாது. அதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அது ஆடவே இல்லை.”
(ம.பொ.சி- எனது போராட்டம்)
1952ஆம் ஆண்டு இராசாசி ஆட்சியில் தான் ஆந்திரர்கள் ‘மதராஸ் மனதே’ என்று முழக்கமிட்டனர். அப்போது காமராசர் வாய்மூடி மெளனம் காத்தார்.
“சென்னை மீட்பில் காமராசரின் மவுனத்தைக் கண்டு ஆந்திரராகிய என்.சஞ்சீவி ரெட்டியார், “காமராசரின் மெளனம் புத்திசாலித்தனமானது, பொருள் நிறைந்தது. மற்ற தலைவர்களும் அவரை பின்பற்ற வேண்டும்” என்று அறிக்கை விட்டார். (ம.பொ.சி- எனது போராட்டம்)
1956இல் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உண்ணாநிலை நடத்தி உயிர்நீத்தார். நேருவின் கூட்டாளியான காமராசர் நினைத்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாடு பெயர் மாற்றக்கூடாது என்ற காமராசரின் பிடிவாதமே சங்கரலிங்கனாரின் உயிரைக் குடித்தது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே "அண்ணா" தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்து சரித்திரத்தில் இடம் பெற்றார்....
ஆனால் இன்றைய
'வாட்ஸ் ஆப் அறிவாளிகள்' அண்ணாவின் புகழை மறைக்க
"தீவிர காங்கிரஸ் வாதியான கண்டன் சங்கரலிங்கனாரின் கோரிக்கையை ஏற்க மறுத்த தீவிர காங்கிரஸ் வாதியான காமராசரை தூக்கிச் சுமக்கிறார்கள்".
44 அப்பாவி தலித் கூலி விவசாயிகளைப் படுகொலை செய்த வெண்மணி கொலைகாரக் கும்பலுக்கு எதிராக காமராசர் நடத்திய போராட்டங்கள் எத்தனை?...
எனக் கேட்டால் 'பேந்தப் பேந்த' முழிப்பார்கள்.
வரலாறை நாம் சொல்வோம்....
வெண்மணி கொலைகாரன்
இரிஞ்சூர் கோபால கிருஷ்ணனை பாதுகாத்தவர் காமராசரின் செல்லப் பிள்ளை கருப்பையா மூப்பனார்....
இது தெரிந்தும் காமராசர் எடுத்த நடவடிக்கை என்ன ?
ஆனால் கீழ்வெண்மணி படுகொலைக்குக் காரணமான கோபாலகிருஷ்ணநாயுடுவை வெட்டிக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற 13 பேரில் 12 பேர் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள்....
இதுவெல்லாம் தெரியாமலேயே கொம்பு சுத்தும் வாய்ப்பேச்சு வீரர்களின் முகமூடியைக் கிழிப்பது பெரியாரின் தடி என்பதை நாம் புரியவைப்போம்....
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போர் திராவிட முன்னேற்றக் கழகத்தால் கையெடுக்கப்பட்டு தீவிரமடைந்த போது தமிழுக்கு ஆதரவாக காமராசர் செய்த நடவடிக்கைகள் என்ன ?
காமராசர், காங்கிரஸுக்கு ஆதரவாகவே செயல்பட்டார். காங்கிரஸின் முதல்வரும், காமராசரின் "நிழல்" முதல்வருமான பக்தவத்சலம் மாணவர்களை கொன்றொழித்த போதும் அதை கண்டிக் கூட இல்லை.
1960 ஆம் ஆண்டு உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தை கொண்டு வர கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் பெரு முயற்சி தெய்தார்... அதற்கு
பெரும் முட்டுக்கட்டையைப் போட்டவர் யார் தெரியுமா ?.....கர்ம வீரர் காமராசர் தான்.
1974 ல் தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியால் சிரிமாவோ பண்டாரநாயகே தலைமையிலான இலங்கைநாட்டு அரசிடம் நட்புறவு அடிப்படையில் தரப்பட்டது.
கச்சத் தீவை காங்கிரஸ் தாரை வார்க்கும் போது கர்ம வீரர் என்ன போராட்டம் நடத்தினார் ?....வாய்மூடி மௌனியாகத்தானே இருந்தார்.
முதல்வராக இருந்த கலைஞரைக் கேள்வி கேட்காமல் காமராசரைக் கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம் என்கிறீரா ?
அப்போது காமராசர் நாகர்கோவில் நாடளுமன்ற உறுப்பினர். கச்சத் தீவிற்காக என்ன செய்தார்?
1957 சனவரி வால்பாறை படுகொலை . கூலி உயர்வு கேட்ட எஸ்டேட் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது யாருடைய ஆட்சியில் ? பெருந்தலைவரின் ஆட்சியில் தானே.
வாட்டாக்குடி இரணியனும் சிவராமனும் களப்பால் குப்புவும் படுகொலை செய்யப்பட்ட போது காங்கிரசின் தலைவராக இருந்த காமராசர் என்ன செய்தார்?
காங்கிரஸ் காமராசர் ஆட்சியிலே கம்யூனிஸ்டுகள் மீதான அடக்கு முறை தலை விரித்தாடியது.
தஞ்சை விவசாயக் கூலிகளின் இரத்தமும் சதையும் "சொல்லும்" பண்ணையார்களின் பாதுகாவலர் யார் என்று?
மீண்டும் தொடர்வோம்..
நன்றி பெரியாரின் பேரன் நான்

கருத்துகள் இல்லை: