சனி, 20 ஜூன், 2020

சாதனை படைத்துள்ளார் மா.சுப்ரமணியன். asia book of records) இல் சென்னை முன்னாள் மேயரின் சாதனை ...

Chennai Mayor Ma. Subramanian honour to ASIA BOOK OF RECORDS
tamiloneindia : சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டையின் தற்போதய எம்எல்ஏவுமான மா. சுப்ரமணியன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகள் படைத்துள்ளார். தற்போது தனது வீட்டிலேயே எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை நான் ஸ்டாப் ஆக ஓடி ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் (asia book of records).
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மா. சுப்ரமணியன் அவர் தனது பதிவில், 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள்(22.2 ft✖️15.5 ft) எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடைநில்லாமல் (Non stop running) ஓடி,அது நேற்றைக்கு ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு 'ASIA BOOK OF RECORDS'ல் இடம் பெற்றுள்ளதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் சைதை தொகுதி எம்எல்ஏவுமான ம. சுப்ரமணியன் பல்வேறு இடங்களில் நடந்த 21.1 கிமீ தூர மராத்தான் போட்டிகளில் 112 முறை பங்கேற்று தேசிய அளவிலும் ஆசியா அளவிலும் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டம், சர்வதேச கோல்டன் டிஸ்க் விருது வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சென்னையில் உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதால் பலரும் தங்களின் உடற்பயிற்சியை வீட்டு மொட்டை மாடியிலேயே செய்து வருகின்றனர். மா. சுப்ரமணியன் தனது வீட்டு மொட்டை மாடியில் எட்டு வடிவ ஓடுதளத்தை வரைந்து தினம் பயிற்சி செய்து வந்தார். இந்த நிலையில் 4 மணிநேரம் எட்டு நிமிடம் 18 நொடிகள் எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார். இது ஆசிய சாதனையாக ஏற்கப்பட்டு ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் கடந்த 18ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.
 கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்து அதன் மூலம் சாதனை படைத்துள்ளார் மா.சுப்ரமணியன்.

கருத்துகள் இல்லை: