
கரூர் திமுகவை பொறுத்தவரை வாசுகி முருகேசன் மறைவுக்கு பிறகு பல கோஷ்டிகள் உருவெடுத்துவிட்டன. கே.சி.பி., கரூர் சின்னச்சாமி, வாசுகி முருகேசன் தம்பி ரவிக்குமார், நன்னியூர் ராஜேந்திரன் என ஏற்கனவே உள்ள கோஷ்டி அரசியல் வரிசையில் புதிய வரவு செந்தில்பாலாஜி கோஷ்டி. அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு சென்று அங்கிருந்து திமுகவுக்கு வந்தவர் செந்தில்பாலாஜி.
இவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது முதலே கரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கலகம் நடந்து வருகிறது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய கரூர் திமுகவினர் சிலர், ''திமுக தலைமையின் நெருங்கிய வட்டத்தில் தாம் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்காக, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அழைத்துவந்து இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை நடத்தினார். செந்தில்பாலாஜி எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி தலைமையின் நெருங்கி வட்டத்திற்குள் தானும் இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை கரூரில் உருவாக்கிவிடுவார்''
. சமாதானம
செந்தில்பாலாஜியை நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும் அவரை சுற்றி அமமுகவில் இருந்து தன்னுடன் திமுகவில் இணைந்தவர்களே இருப்பார்கள். அவர்களை மட்டும் தான் தன்னுடன் வைத்துக்கொள்வார், காரில் ஏற்றிக்கொண்டு சுற்றுவார். பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருப்பவனை அவர் கண்டுகொள்ளவும் மாட்டார், எங்களை போன்ற ஆட்களுக்கு பதவியும் கொடுக்கமாட்டார் அவர்
செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் பிடிக்காமல் கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவரும், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சிலில் முக்கிய பொறுப்பில் உள்ளவருமான மாரப்பன் அண்மையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துவிட்டார். இன்னும் பலர் இணையலாமா என யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். இது தொடர்பாக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்த பஞ்சாயத்து இங்கு எடுபடவில்லை.'' என அந்த நிர்வாகி தனது உள்ளக்குமுறலை நம்மிடம் கொட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக