ஞாயிறு, 24 மார்ச், 2019

காங்., வேட்பாளர் பட்டியல்; அதிருப்தியில் காங்., தொண்டர்கள்

தினமலர் : சென்னை : நேற்று முன்தினம் (மார்ச் 22) வெளியிடப்பட்ட, லோக்சபா தேர்தலுக்கான தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் தங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இதே போன்று காங்., வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டதும், சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பதில் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதும் பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.>காங்., வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கார்த்தி சிதம்பரமும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால், தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே தேர்தல் பணிகளை துவக்கி இருந்தார். ஆனால் கட்சி தலைமையோ அப்பா - மகன் மீதான ஏர்செல் மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, அதற்காக 22 நாட்கள் கார்த்தி சிறை சென்றது, தற்போது இருவரும் முன்ஜாமின் கேட்டுள்ளது ஆகியவற்றை காரணம் காட்டி சீட் தர மறுத்துள்ளது.



கன்னியாகுமரி தொகுதிக்கு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ.,வான வசந்தகுமார், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2014 ல் காங் தனித்து போட்டியிட்ட போது இவர் 2.44 லட்சம் ஓட்டுக்கள் பெற்றார். இது குறித்து காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், பார்லி.,யில் சிறுபான்மையினர் குரல் ஒலிக்காமல் போக உள்ளது துரதிஷ்டவசமானது. காங்.,க்கு சிறுபான்மையினரிடம் பாரம்பரிய ஓட்டுவங்கி உள்ளது. அவர்கள் இந்த முடிவால் மனமுடைந்துள்ளனர் என்றார்.


தேனி, திருச்சி நிலைமை என்ன ?



இதே போன்று தேனி தொகுதியில் 2 முறை எம்.பி.,யாக இருந்த ஆரூண் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னாள் மாநில தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நிலையை காரணம் காட்டி ஆரூணுக்கு சீட் மறுக்கப்பட்டதுடன், இளைஞர் காங்., தலைவராக உள்ள ஆரூணின் மகன் ஹசன் மவுலானாவுக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது தேனி தொகுதி காங்., வேட்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தொகுதியை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள இளங்கோவன், காங்., வேட்பாளரான திருநாவுக்கரசிற்கு கடும் நெருக்கடியை தருவார். திருச்சியில் மக்களிடம் ஆதரவுள்ள அடைக்கலராஜிற்கு சீட் தொகுதி வழங்கப்டாமல் புறக்கணிக்கப்பட்டதும் காங்., தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: