வியாழன், 28 மார்ச், 2019

உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்கு.. . பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் கூட்டம்


news 18.com :தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவருவதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.

இதையடுத்து தேர்தல் பறக்குப்படை அலுவலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் 143, 341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை: