புதன், 27 மார்ச், 2019

கமலஹாசனின் அரசியல் எப்படிப்பட்டது? கொஞ்ச நாட்களிலேயே சாயம் வெளுத்த கதை

சாவித்திரி கண்ணன் : கமலஹாசன் பாலிடிக்சை கவனியுங்கள்! அதற்கு இராயிரம் ஆண்டுகால பாரம்பரியப் பின்புலம் உண்டு!
அவருக்கு எப்பவுமே மேல்மட்ட தொடர்புகள் தான் உசத்தி!
அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டும்.. ஆனா,இங்கிருக்கும் அந்த கட்சியின் தமிழக தலைவர் வசிகரன் வகையராக்கள் தேவையில்ல ராஜிவ்காந்தியை போய்பார்பார். ஆனா, திருநாவுக்கரசையோ, அழகிரியையோ சட்டை செய்ய மாட்டார்.
பிரகாஷ் காரத்தை  பார்ப்பார்.கேரள முதல்வரை பார்பார். ஆனால், ராமகிருஷ்ணனையோ, பாலகிருஷ்ணனையோ பொருட்படுத்த மாட்டார்.தன் கட்சியிலேயே இருந்த இடதுசாரி
சிந்தனையாளன்  பாரதி கிருஷ்ணகுமாரை புறக்கணித்து வெளியேறவைப்பார்!
இடதுசாரிகளுக்கு எதிர் அரசியல் செய்யும் மம்தாபானர்ஜியின் அரசியல் அதிகாரத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்.
நேர்மையான அரசியலைப் பேசிக் கொண்டே டி டி வி தினகரனோடு கூட்டணிக்கு பேரம் பேசுவார்..
பாம்பின் கால் பாம்பரியும் என்பதால், கமலஹாசன் கேட்ட மூன்று சீட்டைக் கூட தரமாடேன் என்று கமலஹாசனுக்கு உடனடி கல்தா கொடுத்துவிட்டார் தினகரன்.!

ஏதாவது ஒரு திராவிட இயக்கத்துடன் அடையாளப்படுத்தி அரசியல் அங்கீகாரம் பெறுவதே தமிழக அரசியலில் காலூன்ற வழி என கடைசி நேரத்தில் தி மு கவிற்கு தூது விட்டு பார்த்தார்.தி மு க தலைமை சுதாரித்துக் கொண்டது. அப்போது கமலின் சுயரூபம் வெளியே வந்தது.
ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்து இன்று வரை சுண்டுவிரலை கூட அசைக்க மறுக்கும் கமலஹாசன் யாருடைய தொடர்ச்சியாக அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறார்..என்பதை இன்று நாம் புரிந்து கொள்வதற்கு இந்த உதாரணங்களே போதுமானதாகும்
சாவித்திரி கண்ணன்

கருத்துகள் இல்லை: