செவ்வாய், 26 மார்ச், 2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் என உச்சநீதிமன்றம் உத்தரவாதம் கொடுத்துள்ளதாக தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
ttv dinakaran common symbol...election commissiontamil.asianetnews.com - vinoth kumar : மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி. தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி. தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தீதான தீர்ப்பில் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த தீர்ப்பில் டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது.

அதேசமயம் அமமுக சார்பில் நிறுத்தப்படும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள் என்றும், எக்காரணம் கொண்டும் அமமுக அரசியல் கட்சியாக கருதப்படாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து குக்கர் சின்னம் கிடைக்காதது டி.டி.வி. தரப்புக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று வேறு பொது சின்னத்தை ஒதுக்குமாறு கூறியிருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பொது சின்னம் கிடைக்குமா என்று ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்

கருத்துகள் இல்லை: