திங்கள், 19 நவம்பர், 2018

தமிழ் நாட்டின் துயரம் அதிமுக .,, 2010-2011 ஆண்டில் 5 லட்சம் வீடுகள் கட்டிய கலைஞர்.. மீதி திட்டத்தை கிடப்பில் போட்ட ஜெயலலிதா

Don Vetrio Selvini : 2010ல், தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 21 லட்சம் குடிசை
வீடுகள் இருந்திருக்கின்றன. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த விசிக பொதுச்செயலாளர் திரு. ரவிக்குமார் , இந்த குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றித் தர கோரிக்கை வைக்கிறார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலைஞர் தலைமையிலான திமுக அரசு , குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றும் பணியை துவக்குகிறது. 2010-2011 ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 5,00,000 (5 லெட்சம்) வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாற்றப்படுகின்றன.
2011ல், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வருகிறது. குடிசை வீடுகளை காங்கிரீட் விடுகளாக மாற்றும் திட்டமும் கிடப்பில் போடப்படுகிறது.
ஒரு வேளை,ஈழத்தாய் மட்டும் , கலைஞர் மீது கொண்ட காழ்ப்புணர்வு காரணமாக திட்டத்தை கைவிடாமல் இருந்திருந்தால், நாகை மாவட்டத்தில் மட்டும் 2 லெட்சம் குடிசை வீடுகள் காங்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டிருக்கும். கஜா புயலில் இருந்து வீடும் காப்பாற்றப் பட்டிருக்கும்.
சீனாவின் துயரம் என்று மஞ்சள் ஆறறை குறிப்பிடுவார்கள், அதுபோல, தமிழ் நாட்டின் துயரம் அதிமுக .<

கருத்துகள் இல்லை: