சனி, 24 நவம்பர், 2018

டெல்டா விவசாயம் ..நெல்லுக்கு மாற்று பயிராக தென்னை தேக்கு என்று .....படித்த_முட்டாள்களால்...

வனத்தையன் தமிழரிமா : கஜா புயல் ஆடித்தீர்த்த கோரதாண்டவத்தால் சிதறடிக்கப் பட்டுள்ளது டெல்டா மாவட்டங்கள். நிவாரணம் அளிக்க வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் மக்களின் துயரத்தில் பங்கேற்காமல் புள்ளிவிவரங்களை அள்ளிவீசி அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.
காற்றின் வேகத்தை தாங்கி நிற்கக்கூடிய வேர் பிடிப்புள்ள மரங்கள் நிறைந்த காடுகளை அழித்து விட்ட காரணத்தால் காற்றின் வேகம் எங்கும் தடைப்படாமல் கடற்கரை கிறாமங்களைத் தாண்டி மாநிலத்தின் மத்திய பகுதிகளிலும் புயல் தடையின்றி கடந்து செல்கிறது. அதன் விளைவாக 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட கூடுதல் இழப்புக்களை புயல் காலங்களில் சந்திக்கிறது தமிழகம்.
டெல்டா மாவட்டங்கள் காடுகள் நிறைந்த பகுதி அல்ல. அது ஒரு சமவெளிப்பகுதி. காற்றைத் தடுக்கும் திறனுள்ள மரங்கள் அங்கே கிடையாது. மாநிலத்தின் நெற்களஞ்சியமான டெல்டாவில் நெல் பயிரிடப்பட்டிருந்தால் இதுபோன்ற பேரிடர் காலங்களில் ஒரு போகம் மட்டுமே இழப்பாக இருந்திருக்கும்.
டெல்டா மாவட்டங்களில் காவிரிப் பொய்த்துப்போனதால் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நெல்லுக்கு மாற்றுப்பயிரை பயிரிடுங்கள் என்று சொன்னதை நம்பி தென்னை, தேக்கு பயிரிட்டனர்.
தென்னையும், தேக்கு வும் நீண்ட காலத்துக்கு பராமரிக்க வேண்டியப் பண பயிர்கள். அதிலும் தென்னை 50 ஆண்டுகளுக்கு மேல் தொடர் விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர்.
தென்னையும் , தேக்கும் பலத்தப் புயலடித்தால் வேரோடு சாயும் தன்மைக் கொண்டவை. அந்த மரங்களின் வேர்ப்பிடிப்புத் தன்மை அப்படிபட்டது. இப்பயிரகள் டெல்டா மாவட்டத்துக்கு ஏற்றப் பயிர்களே அல்ல. இதை கடலோர டெல்டா மாவட்டங்களில் பயிர் செய்ய சொன்ன அறிவாளிகள் தான் இன்றைய அவலத்திற்கெல்லாம் காரணம்.

அவர்களிடம் போய் கேட்டால் தகுந்த பாதுகாப்பு இன்றி தென்னை பயிரிட்டது தவறு என்கிறார்கள். தென்னை பயிடுவதற்கு விவசாயிகள் என்ன பாதுகாப்பு செய்ய முடியும். கடலோரங்களில் தூண்டில் வளைவுகளை உண்டாக்கி அடர்ந்த காடுகளை வளர்க்க வேண்டியது அரசுதானே..! விவசாயிகள் சொந்த செலவில் சதுப்பு நிலக் காடுகளை உருவாக்கிப் பராமரிக்க முடியுமா..?
விவசாயிகள் மற்றும் மீனவர்கள் புயலை எதிர்த்து போராட முடியுமா ? புயலுக்கு எதிராக மீனவர்களுக்கு இருக்கும் போர்க்குணம் கூட விவசாயிகளிடம் இருக்க வாய்ப்பில்லையே...!
விவசாயிகள் , மீனவர்கள் வாழ்க்கைப் பற்றி எதுவுமே தெரியாத பார்ப்பன அதிகாரிகள் மேலே அமர்ந்து கொண்டு வறட்டு ஆலோசனைகளை வழங்குவதும் , அதைக்கேட்டு அரசு எந்திரம் செயல்பபடுவதும் இதுபோன்ற அரைவேக்காட்டுத் தனமான அறிக்கைகளைதான் வெளிக்கொண்டு வரும்.
கஜா புயல் அடித்து பாழடித்த 11 மாவட்டங்களிலும் அரசுக்கும், மக்களுக்கும் #ஒரு_லட்சம் கோடிக்கு மேல் இழப்பு உண்டாகியிருக்கும். தமிழக அரசின் இன்றைய கடன் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் கோடிகள். ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டி மட்டுமே கட்டும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் உதவியின்றி என்ன உதவியை செய்து விட முடியும் ?
ஜிஎஸ்டி யை அமல்படுத்தி மாநில அரசின் விற்பனை வரியில் பாதியைப் பிடுங்கிக்கொள்ளும் மத்திய அரசு பேரிடர் காலங்களிலாவது 6 இழப்புகளுக்கு ஏற்றவாறு சில மாதங்களில் மத்திய வரி வருவாயை மாநில அரசுக்கு விட்டுக்கொடுக்கலாமே...? இதை தமிழக அரசு வழியிறுத்திக் கேட்கலாமே..! நம் உரிமையை நாம் கேட்க நாம் ஏன் கூழைக்கும்பிடு போட வேண்டும் ?
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது மாநில அரசைக் கேட்காமல் துணை இராணுவத்தை அனுப்பிய மோடி அரசு பேரிடர் மீட்பு பணிக்கு துணை ராணுவ உதவிகளையோ, நிவாரண உதவிகளையோ, பார்வையிடும் அமைச்சர்கள் குழுவையோ அனுப்பாமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கும் செயல். இப்படி செய்தால் தமிழிசை அல்ல மோடியே ஓட்டுக்கேட்டு வந்தாலும் மக்கள் விரட்டி அடிப்பது நிச்சயம்...!!
அதுசரி இந்த படித்த முட்டாள்கள் யார் என்பது எனது நேற்றைய பதிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.<>வனத்தையன் தமிழரிமா

கருத்துகள் இல்லை: