திங்கள், 19 நவம்பர், 2018

கஜா புயலுக்கு திமுக எம் பி .எம் எல் ஏக்கள் ஒருமாத சம்பளம் .. மற்றும் ஒரு கோடி ரூபாய் உதவி ..

கஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வுகஜா புயல் பாதிப்புப் பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வுvikatan.com-dinesh. 'கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக, தி.மு.க அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.< தமிழகத்தின் 8 மாவட்டங்களைப் புரட்டிப்போட்டிருக்கிறது கஜா புயல். புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. புயலால் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்துவரும் மக்கள், அடுத்தவேளை உணவும் கிடைக்காமல் அல்லல்பட்டுவருகின்றனர். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டிவருகிறார்கள்.

இந்த நிலையில், கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாயும், கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில்  50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெருந்துயரத்துக்கும், கடுமையான சேதத்துக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில் தி.மு.க அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆய்வுசெய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: