

பிரபல மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி துர்கா மேனன்(35). அவர் லூபஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். 21 நாட்களாக அவருக்கு செய்றகை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு அவரின் சொந்த ஊரான கொடுங்கல்லூரில் இன்று நடந்தது.
அவருக்கு வினோத் என்ற கணவரும், கவ்ரிநாத் என்ற மகனும் உள்ளார். லவ் அன்ட் லாஸ்ட் என்ற டிவி நிகழ்ச்சி மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் துர்கா மேனன். காதல், உறவுகளில் உள்ள சிக்கல் குறித்து பேசப்பட்ட முதல் மலையாள டிவி நிகழ்ச்சி லவ் அன்ட் லாஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக