

மணல், 'குட்கா' என, பல விஷயங்கள், அவரது கவனத்திற்கு வந்தன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வின்போது, சில ஊழல்களை, கவர்னர் உறுதி செய்துள்ளார். ஆளுங்கட்சியில் நிலவும் குழப்பங்கள், ரஜினி - கமல் அரசியல் பிரவேசம், சட்டம் - ஒழுங்கு குறித்த அறிக்கைகள், அவர் கையில் உள்ளன.
அவர், பிரதமர் மோடியை சந்தித்தபோது, அவை அனைத்தையும் தந்துள்ளார். அப்போது, பிரதமர் மோடி, அரசு மற்றும் அரசியல் போக்கை தொடர்ந்து கவனிக்க, கவர்னருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், தமிழக அரசு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறதா என பார்க்க, சிறிது அவகாசம் தரலாம் என்றும், கவர்னரிடம் கூறியதாக தெரிகிறது. மாநில அரசின் போக்கை பொறுத்து, மத்திய அரசின் நடவடிக்கை அமையும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக