இந்த சந்திப்பு குறித்து இருவருமே பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து தத்தம் ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், "தோழர் ஜிக்னேஷ் மேவானியை
சந்தித்தது எதிர்பாராத இனிய தருணம். என் வீட்டுக்கு வருகை தந்தமைக்கு
நன்றி. உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள். உங்கள் எண்ணங்களுடன்
ஒத்துப்போகிறேன். நீங்கள் செய்யும் பணியை தொடருங்கள். உங்கள் மீது மரியாதை
கொண்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேபோல், ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், "சூப்பர், டூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்தேன். இனிமையான நபர். அவருடனான சந்திப்பு அற்புதமானது. பொங்கலை அவருடன் மகிழ்ந்து கொண்டாடினேன்" என ட்வீட் செய்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக