வியாழன், 18 ஜனவரி, 2018

கலைஞர் வரலாற்றை திரித்து கதையளக்கும் பாஜக நாராயணன் ,,,,

Steephan Raj : வனவாசம் எழுதியாதற்காய் கலைஞர் கண்ணதாசன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததும், அதில் கவிஞர் மன்னிப்பு கேட்டதும், பின்னர் கலைஞர் மன்னித்து வழக்கை முடித்துக்கொண்டதும். தமிழர்களுக்கு மட்டும் தெரிந்த விடயம் திருப்பதி நாராயணன் !
இந்த கவிதை வழக்குக்கு பின் கவிஞர் எழுதியது!
எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும்
வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை!
நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி இன்று
எனக்கொரு கவிதையானாள் இதுதான் நான் கண்ட இன்பம் !
கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்

மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் !
பன்னி நான் கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் !
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்
தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள், - மின்னும்
அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் - நானும்
பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன், - என்ன
மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்

கருத்துகள் இல்லை: