tamil.oneindia.com -lakshmi-priya.:
திருவனந்தபுரம்:
கேரளா வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் பீப் சாப்பிட்டதால்
கடவுள் கொடுத்த தண்டனை என்று இந்துத்துவாக்கள் விஷமக் கருத்துகளை பரப்பி
வருகின்றனர்.
கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியது. இதனால் அங்குள்ள 14 மாவட்டங்களுக்கும் நீர் சூழ்ந்தது. இதனால் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் 324 பேர் பலியாகிவிட்டனர். மேலும் சிலர் வீடுகளை இழந்தனர்.
மாநிலத்தில் 19,512 கோடி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பீப் சாப்பிட்டதால்...
58 தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர், மீனவர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றி வருகின்றனர். ஒட்டுமொத்த கேரள மாநிலமே வெள்ளத்தால் மிதக்கும் இந்த சூழலில் பீப் சாப்பிட்டதால்தான் இந்த தண்டனை என்ற விஷமத்தனமான கருத்து எழுந்துள்ளது. கேரளா இந்துக்கள் பீப்களை உண்ணுவதை நிறுத்த வேண்டும். பீப் சாப்பிடுவதால் நீங்கள் இந்துக்கள் என்று கூற முடியாது.
வட்டியும் முதலுமாக இயற்கை அன்னை உங்களுக்கு திருப்பி செலுத்திவிட்டது என்று ஒரு டூவிட் வந்துள்ளது.
பீப் கறி ; இன்னொரு டுவீட்டில் என்ன உதவி தேவை. பெரும்பாலான மலையாளிகள் வளைகுடா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றனர்.
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தேவாலயங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். அவர்கள் வாழ்வதற்கு உணவளிக்க முயற்சித்தால் அப்போதும் அவர்கள் மாட்டுக் கறியை கேட்பர் என்று அந்த டுவீட்டில் கூறப்பட்டுள்ளத
கேரள அரசு மீது கடவுள் ஐயப்பனுக்கு கோபம். மாட்டிறைச்சிக்கு எதிரான போராட்டத்தின்போது கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு அப்பாவி மாட்டை வெட்டி வெட்டவெளியில் சமைத்து சாலையிலேயே விருந்து வைத்தனர்.
இதை கடவுள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார் என்று மற்றொரு டுவீட் கூறுகிறது.
கேரளத்தில் ஏற்பட்ட பிரச்சினை என்பது முழுவதும் இயற்கை சார்ந்த விஷயமாகும். ஆனால் பீப் சாப்பிட்டதால் கடவுள் தண்டித்து விட்டார் என்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் நுழைய முயற்சிப்பது ஆகியனதான் காரணம் என்று இந்துத்துவாக்கள் கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சி போடுவதாகும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக