சனி, 25 ஆகஸ்ட், 2018

கர்நாடகாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகராறு


தினத்தந்தி : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மாநில அமைச்சர் ச.ரா.மகேசு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,
இது பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மடிக்கேரி, குஷால் நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதனால் பொதுமக்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜோடுபாலா, மதேநாடு, மன்னங்கேரி, குஷால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குடகு மாவட்ட வெள்ளச்சேதங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கார் மூலம் பயணித்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, குடகு மாவட்டத்தை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும், வீடு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய அரசு செய்துதரும். எனவே, பொதுமக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

குஷால் நகரின் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட போது, அவருக்கு எதிராக ஒரு சிலர் முழக்கமிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து குடகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளப் பாதிப்புகள், இழப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வெள்ளபாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த நிர்மலா செய்தியாளர்களின் சந்திப்புக்கு தாமதமானது. இந்த நிலையில், வெள்ளப்பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்குமாறு மாநில அமைச்சர் கேட்டுக்கொண்டதால் சர்ச்சை வெடித்து.

நிர்மலா சீத்தாராமன் ஆய்வின்போது, பயணத் திட்டத்தில் குறிப்பிடப்படாத சில நிவாரண முகாம்கள் சென்றதாகவும், முன்னாள் ராணுவ அதிகாரிகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அவரைத் தொடர்பு கொண்ட கர்நாடக மாநில அமைச்சர் மகேஷ், செய்தியாளர்கள் காத்திருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து  நிர்மலா சீத்தாராமன், தனது பயணம் மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது. நான் தாமதம் செய்யவில்லை என்றார். "நான் மத்திய அமைச்சராக இருக்கிறேன், அதற்கான வழிமுறைகளை பின்பற்றுகிறேன் என்று மாநில அமைச்சரிடம் ச.ரா.மகேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, அப்போது, குடகில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் என தெரிவித்த அவர், குடகு மழை வெள்ளத்துக்கு தனது எம்.பி. நிதியில் இருந்தது. ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். மேலும் பாதுகாப்பு துறை சார்பில் ரூ.7 கோடியும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். 

மேலும், குடகு மாவட்டத்தில் நடந்துள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, நிவாரண உதவிகள் அறிவிக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை: