திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ஸ்டெர்லைட் ஆலை நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய .. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

tamil.oneindia.com -kalai-mathi. தூத்துக்குடி ஆலை: நீதிபதி ஆய்வு செய்ய தேசிய
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!! வேதாந்தா எதிர்ப்பு!- வீடியோ டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்நிலையில் இன்று ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது. ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 16,17ம் தேதியில் நடத்திய ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி குழு ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: