வியாழன், 23 ஆகஸ்ட், 2018

இலங்கை ராஜபக்சேயின் தம்பியின் இறுதி நிகழ்வில் சுப்பிரமணியன் சாமி ...

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் சுப்பிரமணியசாமி சந்திப்புமாலைமலர் :பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். கொழும்பு: பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் மடமுலனாவில் உள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் முன்னோர்கள் இல்லத்துக்கு சென்று அங்கு ராஜபக்சேவை சந்தித்தும் பேசினார். அப்போது டெல்லிக்கு வருமாறு சுப்பிரமணியசாமி அவருக்கு அழைப்பும் விடுத்தார். மேலும், நேற்று முன்தினம் மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.


இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பதிவில், “இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததால் இந்தியர்கள் கொண்டிருந்த மிகுந்த வேதனையை தணித்தவரும் ஆவார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை: