வியாழன், 23 ஆகஸ்ட், 2018

மோடி குஜராத் பூகம்பத்தின் போது பெற்ற வெளிநாட்டு உதவிகள் பட்டியல்

வெளிநாட்டு நிதியை ஏற்கலாம்: பினராயிVenkat Ramanujam : மோடி குஜராத்தில் மாநில
முதல்வராக இருந்த போது பூகம்பம் ஏற்படுத்திய பேரிடரில் வெளிநாடுகளின் அவர் பெற்ற விவரம்.. Narendra #Modi when he as CM Gujarat received below foreign aids at the time of Earthquake ..
மின்னம்பலம்:: பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு தானாக விருப்பப்பட்டு உதவ முன்வந்தால், மத்திய அரசு ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஜூலை 30ஆம் தேதி வரை தண்ணீர் ஆரஞ்சு அலர்ட்டுக்கு குறைவாகவே இருந்தது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தண்ணீரின் அளவு பின் சென்ற நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி பெய்த கனமழை காரணமாகத் தண்ணீரின் அளவு அதிகரித்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டது. யாரும் இதை முன்கூட்டியே கணித்திருக்க முடியாது. எனினும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்” என்று தெரிவித்தார்.

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றியைச் சமர்ப்பித்துள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட பினராயி, “இங்கிலாந்தில் இருந்தாலும் அவர்கள் எங்களை நினைவில் வைத்துள்ளனர். உலகம் முழுவதுமே எங்களுக்கு அன்பை அனுப்புகின்றன. இது எங்களைப் பலப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வழியனுப்பி வைக்கும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கேரளாவுக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடியை வழங்க முன்வந்துள்ளது. எனினும் வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதில்லை என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. எனவே, ஐக்கிய அரபு எமீரகத்தின் உதவியை மத்திய அரசு நிராகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய பினராயி, “2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைகளின்படி, மற்றொரு நாடு தானாக விருப்பப்பட்டு உதவ முன்வந்தால், மத்திய அரசு ஏற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வெறும் பேச்சு மட்டும் நடைபெற்று வருகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மத்திய அரசின் நிவாரண நிதியுதவி போதாது என்று பிரதமருக்கு கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடிதம் எழுதியுள்ளார். அதில், “கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இருப்பினும், கேரளாவுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிதியுதவி போதாது. கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் கடுமையான இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு அறிவித்த இந்த நிதியுதவி மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுபோல ஐக்கிய அரபு அமீரகம் நிதியுதவியாக வழங்கவிருந்த ரூ.700 கோடியையும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்பது போன்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இது கேரள மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் சட்டரீதியாக ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருந்தால் அதை மத்திய அரசு உடனடியாக சரிசெய்து, அந்த நிதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: