மின்னம்பலம்: "பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று திடீர் பரபரப்பு. சசிகலாவுக்கு
சர்க்கரையின் அளவு திடீரென அதிகமாகிவிட்டதாம். சிறைக்குள் இருக்கும் சசிகலா காலை உணவைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறாராம். அதுதான் அவரது பிரச்சினைக்குக் காரணமாம். கடந்த சில நாட்களாகச் சர்க்கரைக்கான மாத்திரைகளையும் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள். இதனால் இன்று சிறையில் சசிகலாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் சசிகலா. சில மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் சொல்கிறார்கள். அதன் பிறகு மருந்துகள் செலுத்திய பிறகு கண்விழித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.ஆனால், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லியிருப்பதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலேயே இருப்பதாகச் சொல்கிறார்கள். வெளியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறதாம் "

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக