பிரபாகரன் இறந்ததை கேள்விப்பட்ட பின்பு நான் அவருடைய குழந்தைகளைத் தான் நினைத்தேன் - ராகுல் காந்தி
தந்தையை இழந்த குழந்தைகளின் வலியை நாங்கள் நன்றாகவே அறிவோம். அவரின் மரணம் எங்களுக்கு ஆறுதலைத் தரவில்லை
பிரபாகரன் மரணம் குறித்து ராகுல் காந்தி : ஜெர்மனி நாட்டில்
இருக்கும் ஹாம்பர்க் பகுதியில் உள்ள புசேரியஸ் சம்மர் ஸ்கூலில் நடைபெற்ற
நிகழ் ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்
காந்தி.
அவர் அங்கு பேசுகையில் இந்தியாவின் சாமானியர்களின் வாழ்வினைக் கேள்விக்குறியாக மாற்றிய ஜிஎஸ்டி, வேலையில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழக்க நீக்கம் ஆகியவற்றைப் பற்றி அங்கு பேசியுள்ளார். மேலும் வன்முறைப் பற்றியும் அவருடைய தந்தை ராஜீவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதைப் பற்றியும் பேசினார்.
ஹாம்பர்க்கில் என்ன பேசினார் ராகுல் காந்தி என்பதைப் பற்றிய முழுச் செய்தியினையும் படிக்க
நான் அவருடைய குழந்தைகளைத் தான் நினைத்துப் பார்த்தேன். நாங்கள் எங்களின் அப்பா இறந்த போது தவித்த தவிப்பினைத்தான் அவருடைய குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள். நான் எப்படி ஆழ்ந்த துக்கத்தில் இருந்தேனோ அப்படி தான் பிரபாகரனின் இறப்பினைப் பார்த்து ப்ரியங்கா காந்தியும் வருத்தத்தில் இருந்தார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.
என் வாழ்வில் நான் சந்தித்த வன்முறைகளை மன்னித்தல் மூலம் கடந்து வந்திருக்கிறேன். வன்முறைகளுக்கான மூல காரணங்கள் பிடிபட்டால் புரிதலும் மன்னித்தலும் எளிமையாகிவிடுகிறது என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி
tamil.indianexpress
அவர் அங்கு பேசுகையில் இந்தியாவின் சாமானியர்களின் வாழ்வினைக் கேள்விக்குறியாக மாற்றிய ஜிஎஸ்டி, வேலையில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழக்க நீக்கம் ஆகியவற்றைப் பற்றி அங்கு பேசியுள்ளார். மேலும் வன்முறைப் பற்றியும் அவருடைய தந்தை ராஜீவ் காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதைப் பற்றியும் பேசினார்.
பிரபாகரன் மரணம்
அப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பற்றி குறிப்பிட்டுப் பேசியுள்ளார் ராகுல் காந்தி. 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த செய்தியை நான் தொலைக்காட்சிகளில் பார்த்த பின்பு ப்ரியங்காவிற்கு போன் செய்தேன். என் தந்தை இறப்பிற்கு காரணமானவர் இறந்து கிடக்கிறார். பிரபாகரன் மரணம் எந்த வகையிலும் ஆறுதல் படுத்தவில்லை மாறாக சோகத்தில் தான் ஆழ்த்தியது.ஹாம்பர்க்கில் என்ன பேசினார் ராகுல் காந்தி என்பதைப் பற்றிய முழுச் செய்தியினையும் படிக்க
நான் அவருடைய குழந்தைகளைத் தான் நினைத்துப் பார்த்தேன். நாங்கள் எங்களின் அப்பா இறந்த போது தவித்த தவிப்பினைத்தான் அவருடைய குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள். நான் எப்படி ஆழ்ந்த துக்கத்தில் இருந்தேனோ அப்படி தான் பிரபாகரனின் இறப்பினைப் பார்த்து ப்ரியங்கா காந்தியும் வருத்தத்தில் இருந்தார் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி.
வன்முறையை கடந்து வெளியேறுதல் பற்றி ராகுல் காந்தி பேசியது
வன்முறையை அதிக வன்முறையைக் கொண்டு அடக்க இயலாது. கோபம் இருக்கும் இடத்தில் தான் வன்முறை உருவாகும். கோபத்திற்கான காரணத்தினை புரிந்து கொண்டு அதில் இருந்து வெளிவந்தால் மட்டுமே பிரச்சனையை சரி செய்ய இயலும்.என் வாழ்வில் நான் சந்தித்த வன்முறைகளை மன்னித்தல் மூலம் கடந்து வந்திருக்கிறேன். வன்முறைகளுக்கான மூல காரணங்கள் பிடிபட்டால் புரிதலும் மன்னித்தலும் எளிமையாகிவிடுகிறது என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி
tamil.indianexpress
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக