
ராஜ்கோட் மாவட்டம், பேதா கிராமத்தைச் சேர்ந்த தனியார் சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை மூட்டைகளில், கலப்படம் செய்ய மணலும் சிறுகற்களும் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்ததால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சேமிப்புக் கிடங்கில் நிலக்கடலை கலப்படம் செய்ய மணலும் சிறுகற்களும் குவிக்கப்பட்டு இருந்ததால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதஒவ்வொரு மூடையிலும் 10 கிலோ நிலக்கடலையைப் பிரித்தெடுத்துவிட்டு, அதற்குப்பதில் அதேயளவு மணல் அல்லது கற்களை கலப்படம் செய்துள்ளது கண்டுபிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு பிரித்தெடுத்த கடலையை தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்றதில், பெரும் ஊழல் நடந்ததாக, போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும், நிலக்கடலை இருப்பு வைக்கப்பட்ட வெவ்வேறு இடங்களில் நான்கு தீ விபத்துகள் நடந்துள்ளன.
இந்த விபத்துகள், நிலக்கடலையில் செய்த கலப்படம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் நடந்தது என கூறப்படுகிறது. தீ விபத்தில் 51 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கடலை மூட்டைகள் தீயில் கருகி நாசமாயின.இந்த ஊழலில், குஜராத்தின் முன்னாள் விவசாயத் துறை அமைச்சர் சிமான் சபாரியா சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்விவகாரம், குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதால், மாநில காங்கிரஸ் கட்சியினர், நிலக்கடலை வாங்கி சேமித்து வைத்ததில் ₹4,000 கோடிக்கு ஊழல் நடந்ததை, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்
இவ்வழக்கு தொடர்பாக, 30 பேரை மாநில குற்றப்பிரிவு ேபாலீசார் கைது செய்துள்ளனர். இதில், ஆளும் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்களும், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்களும் அடங்குவர்.
இந்நிலையில், முதல்வர் விஜய் ரூபானி, குஜராத் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஹெச்.கே.ரதோத் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், நிலக்கடலை வாங்கி சேமித்து வைத்த கிடங்குகள், கலப்படம், 4 தீ விபத்துகள் ஆகியன குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
இதற்கிடையே, மாநில காங்கிரஸ் தலைமை, ஓய்வுபெற்ற நீதிபதி கண்துடைப்பு நாடகம் என்றும் பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக