வெள்ளி, 27 ஏப்ரல், 2018

ராகுல் பயணித்த விமானம் திடீரென 500 மீட்டர் கீழே இறங்கியது. ..சதியென சந்தேகம்?

Prabakaran Ram :இராகுல் காந்தியை ஒழித்துக் கட்ட மோடி அரசு சதி செய்கின்றதா?
காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி இன்று 26/04/2018 ல் கர்நாடகாவிற்கு ஒரு தனியார் விமானத்தில் பயனம் செய்த போது அந்த தனியார் விமானம் திடிரென்று கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் கீழே இறங்கியுள்ளது.
மேலும் விமானத்தின் ஆட்டோ பை
லட் தொழில்நுட்பமும் செயலிழந்துள்ளது.
இது குறித்து கர்நாடகா டி.ஜி.பியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
பாசிச பாரதிய ஜனதாவின் ஒரே எதிரியாக, அகில இந்திய தலைவராக இராகுல்காந்தி தான் உள்ளார்.
ஏற்கனவே போலி என் கவுண்டர் கொலைகளில் புகழ்பெற்ற அமித் ஷா பாரதிய ஜனதாவின் தலைவராக உள்ளார்.
பாசிச மோடி அரசு இந்திய ஜனநாயகத்தினை சீர்குலைக்கும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதி தான் காங்கிரஸ் என்ற எதிர்க்கட்சியை ஒழித்துக் கட்டும் ஒரு முயற்சி.
ஏற்கனவே இராகுல்காந்தியினை மதிப்புக் கொலை செய்வதையே ஒரு தொழிலாக பாரதிய ஜனதாவினர் செய்து வந்தனர். அதில் அவர்களுக்கு வெற்றியும் கிட்டியிருந்தது.
ஆனால் பாஜகவின் முகமூடிகள் கழன்று விழுந்து உண்மை வெளியான சூழலில் இராகுல் காந்தி பற்றிய மக்களின் பார்வை மாறி வருகின்றது.
மோடிக்கும் அமித்ஷாவிற்கு உண்மையான அரசியல்ரீதியான ஆபத்தாக இராகுல்காந்தி மாறும் போது அவரை ஒழித்துக்கட்ட மோடி-அமித் கும்பல் முயலக் கூடும் என்று ஒரு பயம் எங்களுக்குள்ளே சில காலம் முன்பு உருவானது.

அந்த அச்சம் இராகுல்காந்தியை நேசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது.
இராகுல்காந்தியின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது காங்கிரஸ் தலைவர்களின் கடமை. இதில் வேடிக்கை பார்த்தால் கேவலம்.
- Prabakaran Ram

கருத்துகள் இல்லை: