
தினமலர் :ஜெய்ப்பூர் : வெளிநாட்டு மருந்து
நிறுவனத்திற்காக மனிதர்களையே, சோதனை எலிகளாக பயன்படுத்தப்பட்ட சம்பவம்
ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர்
வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நடைபெற்று வருகிறது.
அங்கு செயல்பட்டு வரும் வெளிநாட்டு மருந்து நிறுவனத்தி்ன் மருந்து
தரப்பரிசோதனைக்காக, கூலித்தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்
சுரு மற்றும் பிடாசர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர். ரூ. 500
தருவோம் என்று கூறி அழைத்துவந்து அவர்களை மருந்து தரப்பரிசோதனைக்காக, சோதனை
எலிகளாக பயன்படுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவர்களுக்கு
கடந்த மாதம் 19ம் தேதி, புதிய மருந்து கொடுத்து பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் இவர்களின் உடல்நிலை கடுமையாக
பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விசயம் வெளிவந்துள்ள நிலையில்,
இதுகுறித்த உயர்மட்ட விசாரணைக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளி கதாம்
சராப் உத்தரவிட்டுள்ளார்.
மற்ற வளர்ந்த நாடுகளை
ஒப்பிடுகையில், இந்தியாவில் மருந்து தர பரிசோதனைகளுக்கு ஆகும் செலவு 60
சதவீதம் குறைவு என்று இந்திய தொழிற்கூட்டமைப்பு (CII) மேற்கோள்
காட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக