வெள்ளி, 19 மே, 2017

Facebook ! முகநூல் Fake முகங்களுக்கும் உண்மை முகங்களுக்கும் இடையே ஒரு தளம்?

Shalin Maria Lawrence fakeகள் சூழ் உலகு
'All the world's a stage and we are mere players ' . அப்படினு ஷேக்ஸ்பியர் சொல்லுவாரு , அதாவது இந்த உலகமே ஒரு நாடக மேடை அதில் எல்லோரும் நடிகர்களே . உண்மைதான் இல்லையா ?
எல்லோரும் ஒரு முகமூடி அணிந்து கொண்டு ஏதோ ஒரு கதாபாத்திரமாக வாழுகிறோம் .
இந்த முகநூலில் அதே போன்ற பல கதாபாத்திரங்கள் வெவ்வேறு முகமூடிகளோடு . சொந்த முகங்களை அணிந்த சில போலி மனிதர்கள் , போலி முகம் அணிந்த சில உண்மை மனிதர்கள் .
முகநூல் அப்படிங்கிற இந்த டிஜிட்டல் உலகத்த சுவாரஸ்யமா வச்சிக்கறதுல இந்த fake idsக்கு பெரும் பங்கு இருக்குறத நம்மளால மறுக்க முடியாது .
பார்வதி மேனன் படம் போட்ட fake ids இரவும் பகலும் ,காதலிக்கிறார்கள் முகநூலில் இந்த கோடையிலும் கூட மழையை வருவிக்கிறார்கள் .
பறவை ,நீர்த்துளி ,caricature ,pencil ஸ்கெட்ச்,ஹாலிவுட் இயக்குனர்களின் படங்கள் வைத்த fake idகள் கவிதை வடிக்கிறார்கள் , தற்போது இலக்கிய உலகில் உள்ள கவிஞர்களின் எழுத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் தரத்துடன் படைப்புகளை பதிகிறார்கள் .
சமூகநீதி பதிவுகள் நியாயத்தை யாருக்கும் அஞ்சாமல் கமெண்டில் பதிய ரகுவரன் ,பெரியார் படங்கள் போட்ட fake id கள் .
ஆண்களை ஏமாற்றும் ஆண் பிரியாக்கள் ,ஆண் சிந்துக்கள் .
சுவாரஸ்யமாக தான் இருக்கிறது .

இவர்களுக்கிடையே கருத்தியல் ரீதியாக மோத மூளை இல்லாத கோழைகளால் உருவாக்கபடும் 'திடீர்' fake idகள் .
இந்த குறிப்பிட்ட வகை fake idகள் தான் இந்த முகநூல் வாழ்க்கையய் இன்னும் ...இன்னும் ...இன்னும்ம்ம் ...சுவாரஸ்யமாக்குகின்றன .
எப்படி ?
எந்த சமூக நீதி பிரச்சனை பேசினாலும் அதற்கு எதிரான இல்லையேல் துளி கூட அதை பற்றிய அடிப்படை அறிவில்லாத ஒரு குரூப் வசை பாட கிளம்பும் இந்த முறை பெண் சுயமரியாதை குறித்த ஒரு பதிவிற்கு சுமார் 100 ஒரிஜினல் id யும் 300 fake id களும் கிளம்பின . வசை சொற்கள் ,அசிங்கமான வார்த்தைகள் என ஞாயிற்று கிழமைகளில் பாஸ்டர் அய்யா அர்த்தம் புரியாமல் உளறிக்கொட்டும் அந்நிய பாஷை ரீதியில் கொட்டி தீர்த்தனர் .
இங்க தான் நாம ஒரு விஷயத்தை பாக்கணும். சில பொண்ணுங்க என்ன பண்ணும் ஐயோ நம்மள அசிங்கமா பேசிட்டாங்களேன்னு ஓஓஓ ....ன்னு அழுதுட்டு deactivate பண்ணிட்டு ஓடிடும் ,சில பொண்ணுங்க பல நாள் சாப்பிடாம கூட இருப்பாங்க ,சில பொண்ணுங்க மன உளைச்சல்ல தற்கொலை முயற்சிக்கு கூட ஈடுபடுவாங்க .
நான் என்ன பண்ணுவேன் ?
analysis பண்ணுவேன் ..உளவியல் ரீதியா இவங்க எப்படி பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு தகவல் சேகரிப்பேன் ,social psychology (சமூக உளவியல் ) படி ஆய்வுகள் செய்து இந்தியா ,தமிழ்நாடு ,தென் தமிழ்நாடு ,வட தமிழ்நாடு ,கொங்கு பெல்ட் ,வயது ,படிப்பு ,பாலினம் இவைகளின் அடிப்படையில study பண்ணி ...group behaviour ,conformity ,deindividuation ,depersonalization போன்ற விஷயங்கள ஆராய்ச்சி பன்ணுவேன் .
இது முடிஞ்ச பிறகுதான் சுவாரஸ்யமே ஆரம்பம் .
இப்போ அப்படியே அந்த fake id ங்க பக்கம் போய் பாக்குறேன் . பல்வேறு போட்டோக்கள் ,விசித்திரமான பேர்கள் வச்சி இருக்க ids . அந்த id கள்ள இருந்து அவங்க திட்டும்போது எனக்கு அவங்க வச்சிருக்க ப்ரொபைல் போட்டோதான் எங்கிட்ட பேசுற ஒரு feel கிடைக்கும் .
இதுலயும் வகைகள் இருக்கு ,அதுல பெரும்பாலும் அவர்கள் வைத்திருக்கும் போட்டோக்கள் ...
1 .நயன்தாரா -எனக்கு நயன்தாராவை ரொம்ப பிடிக்கும் அவங்க வாயிலிருந்து கெட்ட வார்த்தை வரும்போது கேக்க கிளர்ச்சியா இருக்கு .அதுவும் இல்லாம அவ்வளவு பெரிய நடிகைக்கு என் மேல இவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி இருக்குன்னு நினைக்கும்போது உள்ளுக்குள்ள சந்தோஷமா இருக்கு .
2 .அஜித் குமார் -வலைத்தளங்கள்ல அதிகமா விமர்சிக்கபடுறது எங்க அஜித் அண்ணா தான் ,எவ்ளோ mental torture இருக்கும் அவர்க்கு ,அந்த வெறுப்புல தான் எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தான்னு என்ன புடிச்சு கத்துறாருன்னு நெனைச்சிப்பேன் .
3 .வடிவேலு -யோவ் அவரே ஒரு காமெடி பீசு இதுல அவர் வாயிலிருந்து வர வார்த்தையெல்லாம் ஒருத்தி சீரியஸ் ஆஹ் எடுத்துப்பாளா ? அதுலேயும் அந்த போட்டோ எல்லாம் பாத்த சிரிப்பு தான் வருது பாஸ் என்ன நம்புங்க .
4 .காஞ்சி பெரியவா - பெரியவா வாயால அசிங்கமா வாங்கி கட்டிக்கிட்டா straight ஆ சொர்க்கலோகம் போய் இந்திரனோட டூயட் படாலாம்னு சாஸ்திரம் சொல்லுது ஓய்ய்ய் .
5 .காளை மாடு - மாட்டு வாயிலேந்து கூட கெட்ட வார்த்தை . போன வாரம் சாப்ட beef கட்லெட் க்கும் ,ரோஸ்ட் க்கும் பாதிக்கப்பட்ட இனத்தை சேர்ந்த மாடு கத்திட்டு போகட்டுன்னு விட்டுடுவேன் ,அடுத்த வாரம் beef பிரியாணி சாப்பிட்டு பழிவாங்கிடுவேன் .
6 . சிவன் /கிருஷ்ணன் /முருகன் -Are you even serious ? கடவுள்னு இவங்க கும்புடற ஒன்ணு வாயிலேந்து கெட்ட வார்த்த வந்த அது எப்ப்டி எனக்கு அசிங்கம் ? அது self damage தானே ? ஓ ....ஆ ..... ஓ .....ல ன்னு பேசுற கடவுள் தான் அசிங்க படணும் சென்றாயன் .
7 . சுபாஷ் சந்திர போஸ்/முத்துராமலிங்க தேவர் - பசிபிக் கடல உறைய வைக்க instrument குடுத்த முத்துராமலிங்கனார் போஸ்க்கு கூட வே பொம்பளைங்கள திட்ட கத்து குடுத்துட்டாரு போல .
ஆக இந்த fake id ல வந்து திட்ற எல்லாரையுமே நான் கார்டூன்களா தான் பாக்குறேன் ...எனக்கு செம்ம entertainment .
சரி நீ தான் சிரிச்சிட்டு போய்டுற இல்ல அப்புறம் ஏன் அப்படி திட்றவங்க பத்தி பேசுறேன்னு கேப்பிங்க ...கண்டிப்பா சில aliens கேக்கும் .
நான் முன்னேறிட்டேன் ,நான் independent ,தன்னம்பிக்கை நிறைஞ்ச பொண்ணு .நான் ஷாலின் .சில பேர் பண்ற troll எல்லாம் எனக்கு தூசுக்கு சமானம் .ஆனா .... நான் மேல சொன்ன மாதிரி இந்த சில்ற தனத்தால் பாதிக்கப்படும் பெண்கள் இனிமே பாதிக்க பட கூடாது .அது நிக்குற வரைக்கும் நான் பேசிட்டே தான் இருப்பேன் .
அன்னைக்கு யாரோ ஒருத்தர் பெண்களுக்காக பேசினாங்க ,கல்லடி பட்டாங்க ,அசிங்கப்படுத்த பட்டாங்க இன்னைக்கு நான் படிச்சேன் ,வேலைக்கு போறேன் ,ஓட்டு போடறேன்.அதுக்கு காரணம் ஒரு பெண்ணியவாதி .இன்று நான் பேசுவது இன்னொருவருக்காக .
நான் முகநூலுக்கு வந்தது எனக்காக அல்ல .டாட் .
Shalin.

கருத்துகள் இல்லை: