சனி, 20 மே, 2017

மோடி அரசு கவிழும்: லாலு பிரசாத்

மத்தியில் இருக்கும் பாஜகவின் ஆட்சி ஐந்து வருடம் முழுமை அடையாமல் கவிழ்ந்து விடும் என லாலு பிரசாத் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் குறித்து மே 19-ம் தேதி லாலு பிரசாத் பேசுகையில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை சார்ந்தவர்கள் கவனமாக கேட்டுக்கொள்ள வேண்டும். எந்த நிலையாக இருந்தாலும் சரி, டெல்லியில் உங்கள் பதவிகளில் இருந்து உங்களை லாலு பிரசாத் வெளியேற்றுவார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர், என் மீது வெறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு அவர்கள் விரைவில் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

என் பெயருக்கும், என் கட்சி மீதும் தவறான சாயலை பூசவே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். பாஜகவுக்கு எதிராக ஒரு பேரணி நடத்த இருக்கிறோம். இந்த போக்கிலேயே அவர்கள் நடந்து கொண்டால், விரைவில் மோடியின் அரசு ஐந்து வருடங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் கவிழ்ந்து விடும். ஆகஸ்டு 27-ம் தேதி பாஜகவின் போக்கிற்கு எதிராக காந்தி மைதானத்தில் ஒரு பேரணி நடக்கும். இந்த பிரச்னையில் ஒத்த கருத்துடைய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மேலும் இது சம்பந்தமாக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நல்ல முடிவை எடுப்போம்” என அவர் கூறினார்.  மின்னம்பலம் 

கருத்துகள் இல்லை: