திங்கள், 15 மே, 2017

சமஸ்கிருதம் அல்லது நீட் என்கின்ற பூணூல் இருந்தால்தான் இனி டாக்டர் ஆகலாம்?

1920 களுக்கு முன்பு தமிழகத்தில் சமஸ்கிருதம் கற்று இருந்தால் மட்டுமே மருத்துவம் , பொறியியல் , படிக்க முடியும் என்ற சட்டம் அமுலில் இருந்தது ! மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் எதற்கு என்று தற்போது கேட்கலாம் ! ஆனால் அன்று சமஸ்கிருத மொழி தெரிந்தவர்கள் பார்ப்பனர்களே ! மருத்துவர்களாக இருந்தவர்கள் 99.9999 சதவீதம் பார்ப்பனர்களே !
நீட் என்ற பூணூல்..   நாம் வேர்வையை சிந்தி உழைத்த பணத்தில் மணல் , செங்கல் , எல்லாம் வாங்கி கோவில் எழுப்பி அந்த கோவில் கருவறையில் நாம் ஆராதிக்க சிற்பியால் கல்லை உடைத்து உளியால் செதுக்கி உருவாக்கிய சிற்பத்தை கருவறையில் நிறுவபட்டு புனித நீரால் குடமுழுக்கு செய்யப்பட்டு பின்பு கடவுள் சிற்பத்தை செய்த சிற்பியும் கோவிலை கட்டிய கட்டிட கலைஞரும் நிதி உதவி வழங்கிய நாமும் கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. ஏனெனில் நாம் பூணூல் அணிந்திருந்தால் மட்டுமே நம்மால் உண்டான அந்த கடவுளை தொட முடியும் என்ற அநியாயமான , அக்கிரமான விதியை பார்ப்பனர்கள் கடைபிடித்தும் வருவது போல . மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற பூணூலை அணிய வேண்டும் என்று பார்ப்பனர்களின் நலனுக்காக மட்டுமே தன் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் மோ(ச)டி அரசு சட்டமியற்றி கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்து கனவை குழித்தோண்டி புதைத்துவிட்டார். இது வரை தமிழகத்தில் மருத்துவ படிப்பு படிக்க மாணவர்கள் மேல்நிலை படிப்பில் அறிவியல் பாடத்தை படித்திருந்தால் போதும் என்பதே விதியாக இருந்தது .


தற்போதை நிலையில் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் மாநில ,மாவட்ட , நகர , பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருந்தாலோ அரசு நிர்ணயம் செய்துள்ள கட் ஆப் மதிப்பெண்களை பெற்றிருந்தாலே மருத்துவ படிப்பில் சேர இயலாது
இதுவரை தமிழக மாணவர்கள் படிக்காத கேள்வி படாத ஒரு பாடதிட்டத்தில் கேள்விகளை கேட்டு தேர்வு எழுத சொல்வது மாபெரும் அநீதி இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு தன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள தன் அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரைவார்த்து விட்டு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது !

தமிழகத்தில் தற்போது தான் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அதுவும் கடந்த 15 ஆண்டுகளில் தான் பார்ப்பனரல்லாத மாணவர்கள் கணிசமான அளவு மருத்துவர்களாக வந்துள்ளனர் அதை தடுக்கவே மத்திய மோடி அரசு இந்த நீட் என்ற நுழைவுத்தேர்வை நம் மீது திணித்துள்ளது !

1920 களுக்கு முன்பு தமிழகத்தில் சமஸ்கிருதம் கற்று இருந்தால் மட்டுமே மருத்துவம் , பொறியியல் , படிக்க முடியும் என்ற சட்டம் அமுலில் இருந்தது ! மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் எதற்கு என்று தற்போது கேட்கலாம் ! ஆனால் அன்று சமஸ்கிருத மொழி தெரிந்தவர்கள் பார்ப்பனர்களே ! மருத்துவர்களாக இருந்தவர்கள் 99.9999 சதவீதம் பார்ப்பனர்களே ! வேதத்தை சூத்திரன் கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்து என்று பாரப்பனர்களின் வேதமான மனுநீதியில் எழுதியிருந்த்தே அதன் தொடர்ச்சி தான் சமஸ்கிருத மொழி அறிந்தவர்கள் மட்டுமே மருத்துவம், பொறியியல் கற்க முடியும் என்ற நிலை இருந்தது . அந்த இழிவான சட்டத்தை நீதி கட்சி ஆட்சியில் பனகல் அரசர் அவர்கள் அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த போது நீக்கப்பட்டு தமிழ் தெரிந்தவர்கள் மருத்துவம் படிக்க வழிவகை செய்தார் .அதனால் தான் பார்ப்பனரல்லாதோர் மருத்துவர்களாக வர முடிந்தது !

தற்போது மோடி அரசு CBSE பள்ளிகளில் சமஸ்கிருத மொழியை கட்டாயம் பாடமாக அறிவித்துள்ளது ! அரசின் சாரப்பில் சமஸ்கிருத வாரத்தை கடைபிடித்து வருகிறது . சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே . இந்த நிலையில் CBSE பாடத்திட்டத்தில் கேள்வியை கேட்டு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் எப்படி தேர்ச்சி பெற முடியும் ! அதுவும் மிக கடினமான கேள்விகளாக வந்துள்ளது என்று தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர் . அதுமட்டுமன்றி தேர்வு எழுதும் மாணவர்களின் உள்ளாடையை கழட்ட செய்து மாணவர்களை மனரீதியாக உளைச்சல் ஏற்படுத்தியுள்ளனர் .

தமிழக அரசு நம் மக்களின் வரிபணத்தால் மாவட்டத்திற்கு மாவட்டம் மருத்துவ கல்லூரியை கட்டி வைத்திருக்கிறது அந்த கல்லூரிகளில் எல்லாம் வடநாட்டு பாப்பான்களை மாணவர்களாக்கி எதிர்காலத்தில் தமிழகத்தில் மருத்துவர்களே இல்லாத நிலையை ஏற்படுத்தும் சூழ்ச்சி தான் இந்த நீட் தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர முடியும் என்ற சட்டம் ! இது மாநில சுயாட்சிக்கு கேடுவிளைவிக்கும் சட்டம் மட்டுமின்றி கூட்டாச்சி தத்துவத்தையே சிதைக்க கூடியதாக இருக்கிறது .

கோவில் கருவறைக்குள் செல்ல பூணூல் அணிந்திருக்க வேண்டும் என்ற அநீதி இருப்பது போல மருத்துவம் படிக்க நீட்ட என்ற பூணூலை கட்டாயமாக்கியுள்ளனர் .
மனுநீதியின் படி ஆட்சியை நடத்துபவர்களிடம் அநீதியான , அக்கிரமான சட்டங்களை தானே எதிர்பார்க்க முடியும் இவர்களிடம் மக்கள் நலனையா எதிர்பார்க்க முடியும் ! நீட் என்ற பூணூலை அறுத்தெறியும் காலம் விரைவில் ஏற்படும் !

பா.கார்த்திகேயன்

கருத்துகள் இல்லை: