திங்கள், 15 மே, 2017

வெங்காய நாயுடு : மெட்ரோ ரயில் திட்டம் ஜெயலலிதாவின் கனவு திட்டம்.

trollmafia2 : 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்க திட்ட வரைவு (Detailed Project Report) எடுக்கும் பணி தொடங்கியது.. 2001 இல் ஆட்சிக்கு வந்த மாண்புமிகு மெட்ரோ தாய், சென்னைக்கு மெட்ரோ ரெயில் தேவையில்லை மோனோரயில் போதும் என்று கூறிவிட்டு தூங்க சென்று விட்டார்..
2006 மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி வந்த உடன்க் DPR எடுக்கும் வேலை தொடங்கியது.. 5 பேக்கேஜ்களாக பிரித்து, கோயம்பேடு தொடங்கி அண்ணா நகர், கீழ்பாக்கம், அண்ணா சாலை வழியாக ஆலந்தூர் வரையும், கோயம்பேடு தொடங்கி வடபழனி, அசோக் நகர், கிண்டி, ஆலந்தூர் வரையிலும்., ஆலந்தூரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு செய்து டெண்டர் விடப்பட்டது.. ₹14,600 கோடி செலவில் திட்டம் முடிக்கப்படும் என்று 2007 இல் தெரிவிக்கப்பட்டது.. அதில் 60% செலவுகளை JICA என்ற ஜப்பான் நாட்டு அரசு நிறுவனம் ஏற்றுக்கொண்டது.. 20% மாநில அரசு, 20% மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்றும் முடிவு செய்யப்பட்டது..

திட்டம் தொடங்க இருந்த காலகட்டத்தில் (2006 பட்ஜெட்) அப்போது எதிர்கட்சியாக இருந்த ஈழத்தாய், மெட்ரோ ரயிலை கனவு திட்டமாக கொண்ட மெட்ரோ தாய் புரட்சித்தலைவி அவர்கள் தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு உரையை நிகழ்த்தினார்..
"மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறீர்கள். எனது ஆட்சியில் மோனோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. வேண்டும் என்றே, வீம்புக்காக, நல்ல திட்டமான மோனோ ரெயில் திட்டத்தை நிராகரித்து, சென்னை மாநகருக்கு எந்த வகையிலும் ஒத்து வராத, பொருந்தாத மெட்ரோ ரெயில் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாக, தெரிவித்திருக்கிறீர்கள்."
மேலும் அவர்,
"வெறும் வீம்புக்காக, வீணான வரட்டுக் கவுரவத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, மோனோ ரெயில் போன்ற சிறந்த திட்டத்தை, கைவிட வேண்டாம் என்றும்; மெட்ரோ ரெயில் போன்ற உருப்படாத திட்டத்தை, செயல்படுத்த வேண்டாம் என்றும், இந்த தி.மு.க. அரசுக்கு, வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன்." என்றும் கூறினார்..
Link - http://www.koodal.com/news/world.asp?id=19077&title
2011 இல் மெட்ரோ தாய் ஆட்சிக்கு வந்தவுடன் மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.. மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்ட பாலங்கள் அனைத்தும் மோனோ ரயில் பாதைக்கு பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகளிடம் கூறினார்..
ஆயிரக்கணக்கான கோடி கடன் கொடுத்து உதவிய ஜப்பான் நாட்டு நிறுவனம் பல மாதங்களாக பணி நடைபெறாமல் இருப்பதை பார்த்து நொந்து போய் உலக வங்கியிடம் முறையிட்டனர்.. இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தால் உலக வங்கியிடம் இருந்து உங்கள் நாட்டிற்கு எந்த உதவியும் கிடைக்காது என்று இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.. அப்போதைய மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மெட்ரோ ரயில் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது..
2015 இல் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பாதையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.. அப்போது சுரங்க ரயில் பாதையில் பணியாற்றிய ஒரு ரஷ்ய நிறுவனம் வேலையை விட்டுவிட்டு, பல்வேறு நிறுவனங்களுக்கு 80 கோடி கடன் வைத்து தப்பி ஓடிவிட்டனர்.. அவர்களுடன் கூட்டாக பணியாற்றிய மற்றோரு நிறுவனத்தின் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.. இதை அவர்கள் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்..
மத்திய, மாநில அரசுடன் பேரம் பேசும் பணி தொடங்கியது. மெட்ரோ தாய் அரசு சார்பில் 100 சி, மெட்ரோ ரயில் திட்டம் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்று கூறிய வெங்கையா நாயுடு மத்திய அரசின் சார்பில் பேரம் பேசி 200 சி ஒதுக்க கூறினார்.. 100+200 = 300 சி இருந்தால் நாங்கள் இந்த வேலையை ஒரு அளவுக்கு முடித்து விடுவோம்., எங்களுக்கு இந்த வேலையே தேவையில்லை என்று கூறி ஓடிவிட்டனர்..
அன்று மெட்ரோ ரயில் திட்டத்தை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா, மெட்ரோ ரெயில் போன்ற உருப்படாத திட்டத்தை, செயல்படுத்த வேண்டாம் என்று கூறிய ஜெயலலிதா, இன்று மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர், மெட்ரோ ரயில் திட்டத்தை கனவு திட்டமாக கொண்டவராம்..
மறதி தேசிய வியாதி..

கருத்துகள் இல்லை: