வெள்ளி, 19 மே, 2017

கோவாவில் பாலம் உடைந்து விபத்து: 50 பேர் நீரில் மூழ்கி மாயமானதால் பரபரப்பு

கோவா மாநிலம் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப்பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் நீரில் சிக்கி கொண்டனர். தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றும் காட்சியை வேடிக்கை பார்த்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றும் காட்சியை வேடிக்கை பார்த்த 50 பேர் ஆற்றில் விழுந்தனர் பனாஜி: கோவா மாநிலம் தெற்கு பகுதியில் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப் பாலம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் இருந்த 50-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்தனர். இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. விபத்துக்குள்ளான பாலம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வாலிபர் ஆற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற மீட்புப் படை குழுவினர் முயன்று வந்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கையை காண பல்வேறு மக்கள் அங்கு கூடினார். இதனால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது” என்றார். ஆற்றில் குதித்ததில் சிலர் தாங்களாகவே நீந்தி கரை வந்து தங்களது உயிரினை காப்பாற்றிக் கொண்டனர். மேலும் ஆற்றில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான சர்சோரெம் பாலம், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டியிட உள்ள இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ளது என்று கூறப்படுகிறது. மாலைமலர்

கருத்துகள் இல்லை: