திங்கள், 15 மே, 2017

பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடந்த இறுதிக் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அறிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், 37 தொழிற்சங்கங்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளன. 20 ஆண்டாக உள்ள பாக்கியை ஒரே நாளில் கொடுக்க முடியாது. செப்டம்பர் வரை போராட்டத்தை ஒத்திவைக்க அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசின் வேண்டுகோளை தொழிற்சங்கங்கள் பொருட்படுத்தவில்லை. ரூ.1,250 கோடி நிதி கொடுக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதன், வியாழனில் ரூ.750 கோடி வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கு புதன்கிழமை ரூ.171 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது.
தொழிலாளர்களை தொழிற்சங்கத்தினர் திசை திருப்புகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம். 37 தொழிற்சங்க உறுப்பினர்களை வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும். மேலும் ஓய்வு பெற்றவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார  nakkeeran

கருத்துகள் இல்லை: