சனி, 20 மே, 2017

நிர்வாண சித்திரவதை: சிறையிலிருந்து வெளியே வந்த மாணவி பேட்டி


சிறையில் நிர்வாண சித்திரவதை செய்த மனித உரிமை மீறலை தனி நீதிபதி கொண்டு விசாரனை நடத்த வேண்டும் சிறையிலிருந்து வெளியே வந்த மாணவி தெரிவித்துள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த மாணவி வளர்மதி ரயிலில் சென்ற போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை சிறையில் அடைக்கும் முன்னர் ஜெயிலர் ஜெயபாரதி தலைமையில் 3 முறை தொடர்ந்து நிர்வாணப்படுத்தி சோதனையிட்டார்கள். ஆதே போல துணை ஜெயிலர் சோதனை என்ற பெயரில் என்னை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டார் உணவு சரியில்லை என்று புகார் கூறியதை தொடர்ந்து தனிமை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினர்.


என்னுடன் கைதாகி சென்ற ஸ்வாதியை என்னை சந்திக்க விடாமல் தனிப்படுத்தினார்கள். என்னை சந்திக்க வந்த வழக்கிஞர்கள் யாரையும் சந்திக்க விடாமல் தடுத்தார்கள். எனக்காக போராடிய தண்டனை கைதிகள் அனைவரையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொடுமைப்படுத்தி கடுமையாக தாக்கியதில் பல பேருக்கு கை, கால்கள் எல்லாம் உடைந்து மருத்துவச்சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதேபோல் மனித உரிமை மீறல் அதிகளவு நடைபெற்றது. எனவே இதனை தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்திட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து சிறை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர் எழுச்சி இயக்கத்தினர் ஈடுபட்டனர். இதேபோல் வளர்மதியுடன் கூட சிறைக்கு சென்றவர்கள் இன்று ஜாமீன் கிடைத்தது. அவர்களது உறவினர்கள் ஜாமீன் கொடுத்து 10,000 ரூபாய் பிணைய தொகை கட்டியிருக்கிறார்கள்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: