செவ்வாய், 16 மே, 2017

நடிகர்களின் அரசியல் ஆசை .. M.R.ராதாவுக்கு பின்பு மக்கள் நம்பக்கூடிய நடிகர்கள் யாரும் இல்லை?

elango.kallanai  ரஜினிகாந்திற்கு நேரடியாக எளிமையான ஒரு பிம்பம் இருக்கிறது. அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு வாருங்கள் நீங்கள் முதல்வராக ஆக வேண்டும் என்று அழைப்பார்கள் என்று கடந்த இருபது வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார். முத்து என்றொரு படம் வந்தது. அப்போது நான் கூட அவர் அரசியலுக்கு வருவார் என்றே நம்பினேன். அந்தளவுக்கு அரசியல் கனவை வெளிப்படுத்தி இருப்பார். பாபா இன்னும் நான் இருக்கிறேன் என்று சொன்னார். ஆனால் அவர் முதல் முதலாக அரசியல்க் கனவை வெளிப்படுத்திய போதே கருணாநிதி அடித்து நொறுக்கினார். 96 தேர்தலில் திமுக வென்றவுடன் சரத்குமார் ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுக்கு நன்றி என்று அவருடைய இடத்தைக் காட்டினார். மூப்பனாரின் பிரதமர் கனவு கூட முடித்து வைக்கப்பட்டது. இன்னொருத்தர் இருக்கார். தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு சாக்ரட்டீஸ் மாதிரி. விஷம் உடம்பெல்லாம் விஷம். நல்ல வேளைக்கு இவர்கள் இரண்டு பேருமே நமது தேர்வல்ல என்றே மக்கள் சொல்வார்கள் என்று கணிக்கிறேன்.

இப்போது கூட ரஜினி தில்லியில் தனக்கு இருக்கும் ஆதரவை வைத்துக் கொண்டு மிகவும் பலவீனமாகவே முனகுகிறார். அரசியல் என்பதில் யாரும் வரலாம். இன்னொரு எம் ஜி ஆர் அல்லது ஜெயலலிதா என்கிற இடம் ரஜினிக்கு கிடைக்காது. எம் ஜி ஆர் மிகப்ப்பெரிய தொண்டர் பலம் மற்றும் தாய்க்குல ஆதரவோடு வந்தார். ஞாநி ஒரு முறை எழுதியது போல. எப்போதும் பெண்கள் ரஜினிக்கு அவ்வளவு ஆதரவு தந்தது இல்லை. ஜெயலலிதா எம் ஜி ஆர் இருக்கும் போதே காய்களை நகர்த்தி தில்லி முதல் தமிழ்நாட்டு வட்டச் செயலாளர் வரை தொடர்புகளை பலமாக வைத்தே முன்னேறினார். சுற்றி அடிக்கப்படும் போதெல்லாம் வெட்டுவதும் ஓட்டுவதும் என்று பகடயாடியவர்.
விஜயகாந்தை ஒரு பொது ஆளாக காங்கிரஸ் உள்ளே அனுப்பியது. கொஞ்ச நாள் ஆட்டம் காட்டினார். இப்போது அவரும் கூட்டணிக்கு ஏங்கி நிற்கிறார். ரஜினிக்கு விஜயகாந்தை விட அதிகமாக ஆதரவு இருக்குமா அப்படி இருந்தால் இதுவரை அவருடைய ஆதரவு வாக்குகளை வாங்கிய கட்சி யார் என்பதெல்லாம் தெரியாது.
தமிழ்நாடு முழுவதும் அமைப்புகளை உருவாக்கி கூட்டணிகள் உருவாக்கி பணம் செலவழித்து என்று எத்தனையோ இருக்கிறது. இதெற்கெல்லாம் ரஜினி தாங்குவாரா என்று தெரியவில்லை. பணமுடக்கை அவர் விசிலடித்து வரவேற்றார். ஆமா எல்லா பணக்காரர்களும் வரவேற்றார்கள். தவிர மோதியின் புத்தகத்தில் நல்ல பெயர் பெறுவதன் பாதுகாப்பை அறிந்திருப்பார். ‘இப்போது வெற்றிடம் என்று ஒன்று இருக்கிறது என்பது ஒரு அனுமானம். அந்த அனுமானம் தேர்தல் வந்தால் தான் தெரியும். ஆனால் ரஜினிகாந்த் இன்றும் குழப்பமாகவே பேசிவிட்டுச் சென்றார். இன்னும் நடிகன் என்கிற இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டார். ரஜினிகாந்திற்கு பாஜகவின் அழுத்தம் இருப்பது வெளிப்படை. ஆனால் அவரால் வர முடியாது. அவருடைய பிம்பமே அவருக்கு சிறை. அதனால் மரியாதையாகவே வெளியேற விரும்புவார்.
இவர் வலது சாரியாக இருந்தாலும் கொஞ்சம் நேரடியான ஆள். இன்னொருத்தர் இருக்கார். தேசியக் கொடியை போர்த்திக் கொண்டு சாக்ரட்டீஸ் மாதிரி. விஷம் உடம்பெல்லாம் விஷம். நல்ல வேளைக்கு இவர்கள் இரண்டு பேருமே நமது தேர்வல்ல என்றே மக்கள் சொல்வார்கள் என்று கணிக்கிறேன்.

கருத்துகள் இல்லை: