சனி, 20 மே, 2017

மின்னணு இயந்திரங்களை சேதப்படுத்த முடியும் என்பதை நிருபிக்க கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். பல  கட்சிகள் மின்னணு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டின. இது குறித்து கடந்த12ம் தேதி தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டம் நடத்தியது. தொடர்ந்து இன்று மாதிரி மின்னணு ஓட்டு இயந்திரங்களை காண்பித்து அதில் சேதப்படுத்த முடியும் என்பதை செய்து காட்டும்படி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அங்கீகாரம். பின்னர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:
மின்னணு இயந்திரங்கள் சேதப்படுத்த முடியும் என்பதற்கு ஆதாரம் தேவை. மின்னணு இயந்திரங்கள் மூலம் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் குறித்து பல சந்தேகம் எழுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் நடைமுறையில் வெளிப்படை தன்மையை அதிகரிப்பது அனைவரின் பொறுப்பு. யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவரின் சந்தேகங்களும் தீர்க்கப்படும்.திறமையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்த அதிக விதிகளை கடைபிடித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திவருகிறது. இதற்காக தேர்தல் ஆணையத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளது.


பாதுகாப்பு:
மின்னணு இயந்திரத்தை சேதப்படுத்த முடியும் எனக்கூறியவர்கள் அதற்கான உறுதியான ஆதாரத்தை தரவில்லை. கடந்த 2000 முதல் அனைத்து தேர்தல்களிலும் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் 3 லோக்சபா தேர்தல்கள் 107 சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. தயாரிப்பு நிலையிலேயே மின்னணு இயந்திரத்தில் சேதப்படுத்த முடியாது. அதில் பயன்படுத்தப்படும், சிப்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தமுடியும் என்பதால் சேதப்படுத்த முடியாது. மைக்ரோ சிப்களில் மாற்றம் செய்தால், இயந்திரம் செயலிழந்துவிடும்.

இயந்திரங்கள் உயர் தொழில்நுட்பத்தில் தயாறானவை. மின்னணு ஓட்டு இயந்திரம் கொண்டு செல்லப்படும் இடஙகள் மற்றும் வைக்கப்படும் இடங்களில் சேதப்படுத்த முடியாது. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முழுமையான பாதுகாப்பு வசதிகள் உண்டு. மேலும் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி முதல் தேசிய , மாநில கட்சிகள் இயந்திரங்களின் நம்பகத்தன்மையை சோதித்துகொள்ளலாம்.

இதற்காக அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளாக மூன்று பேரை நியமித்துகொள்ளலாம். இது குறித்து வரும் 26-ம் தேதிக்குள் தேர்தல் கமிஷனிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு கட்சியும் ஏதாவது நான்கு தொகுதிகளில் நான்கு இயந்திரத்தை தேர்வு செய்து பரிசோதித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்

கருத்துகள் இல்லை: