செவ்வாய், 16 மே, 2017

ப.சிதம்பரம் சவால் :உங்களுக்கு பிடிக்காததை தொடர்ந்து செய்வேன்.

சென்னை: ஊடகம் ஒன்றுக்கு முதலீட்டு அனுமதி கொடுப்பதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றதாக அமலாக்கப்பிரிவு வழங்கிய தகவலின்பேரிலேயே ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடத்தி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டு நடைபெறும்போது சிதம்பரம் சென்னையில் இல்லை என்று கூறப்படுகிறது. ரெய்டு குறித்து சிதம்பரம் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை இதுதான்: வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியம் பல நூறு அனுமதிகளை வழங்கியுள்ளது. என்மீது புகார் இல்லை  இந்த அமைப்பில் ஐந்து செயலாளர்கள் உள்ளனர். அவர்கள்தான் அனைத்துக்கும் பொறுப்பாளர்கள். அவர்கள் மீதோ, நிதி அமைச்சராக இருந்த என்மீதோ குற்றச்சாட்டு இல்லை.  பரிந்துரை அவர்களுடையது மத்திய அரசின் இந்த ஐந்து செயலாளர்கள் வழங்கிய பரிந்துரைகள் படிதான், சட்டத்திற்கு உட்பட்டு, முதலீடுகளுக்கு அனுமதியும், அனுமதி மறுப்பும் செய்யப்பட்டது.  
 நோக்கம் வேறு ஆனால், தற்போதைய அரசு, சிபிஐ மற்றும் பிற ஏஜென்சிகளை பயன்படுத்தி எனது மகன் மற்றும் அவரது நண்பர்களை குறிவைத்து செயல்படுகிறது. அரசின் நோக்கம் என்னை அமைதிப்படுத்த வேண்டும் என்பதுதான். நான் செய்வேன் நான் செய்வேன் நான் எழுதுவதை தடுக்க வேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், குடிமை சமூக அமைப்புகள் ஆகியவற்றை அடக்கி ஒடுக்கும் அதே நடைமுறையை என்னிடமும் அரசு கையாளுகிறது. நான் சொல்ல விரும்புவதெல்லாம், நான் தொடர்ந்து பேசுவேன், எழுதுவேன். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: