முட்டாள் நவீனமே! பணமும் அதை வைக்க பயன்படுத்தும் பணப் பையும் நீங்கள்
உருமாற்றம் மூலம் உற்பத்தி செய்தது, அவற்றை நீங்கள் உங்கள் மார்புக்கு
முன்னாலும் வைக்கலாம் அல்லது புட்டங்களுக்கு பின்னாலும் வைக்கலாம். ஆனால்
ஒருபோதும் பக்கெட் வைத்து கடலைச் சுத்தம் செய்ய முடியாது என்பதையாவது
முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் இன்று நீங்கள் செய்துகொண்டிருப்பது
கிணற்றில் கலந்துவிட்ட எண்ணெய் கழிவை, வீட்டில் எண்ணெய் ஊற்ற பயன்படுத்தும்
சிறிய தேக்கரண்டியில் அப்புறப்படுத்துவதைப் போன்று என்று ஏன் உங்களுக்குத்
தோன்றவில்லை. இன்னும் சொல்வதென்றால் ஒரு ஊரே பற்றி எரியும்போது அதை வாயால்
ஊதி அணைக்க முயற்சிப்பதைப் போல உள்ளது அறிவு ஜீவிகளே.
எங்கே போய்விட்டது உங்களின்,
அறிவியல்
ஆராய்ச்சி
அறிவுசார் சமூகம்
அரசாங்கம்
அது இது எல்லாம்.
ஏதோ கடல்வாழ் உயிரிகள்தானே என்று நினைக்காதீர்கள், உங்கள் உயிர்ச் சங்கிலியிலிருந்து அறுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு கண்ணிதான் நாங்கள் என்பதை முதலில் உணருங்கள்.
உங்களின் அலட்சியம் உங்களையும் ஒரு நாள், ஒரே நாளில் அழிக்கும். முகநூல்பதிவு பிரகாஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக