வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஜனவரி 13 ஆம் தேதி சுமந்திரனை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டம்? .. தேதி மாறியதால் தப்பினார்?

sumanthiran-964854 சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு புலிகள் தீட்டிய திட்டம் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்தது!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி – 2) சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்து படுகொலை செய்ய வெளிநாட்டு புலிகள் தீட்டிய திட்டம் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்தது!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி – 3) sumanthiran 964854பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றி டிசம்பர் 24ல் எச்சரிக்கை செய்யப்பட்டது</ பின்னர் நான் ஜனவரி 13ல் திட்டமிடப்பட்ட தாக்குதல் பற்றியும் அதன் பின்னர் என்ன நடந்தது என்றும் சுமந்திரனிடம் கேட்டேன். நான் விசேடமாக அவரிடம் கேட்டது வடக்கிற்கான பயணத்தை அவர் இரத்துச் செய்தது ஏனென்றால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று முன்கூட்டியே அவர் எச்சரிக்கை செய்யப்பட்டதாலா என்று.;அதற்கு சுமந்திரன் பின்வருமாறு பதிலளித்தார்: “இல்லை, இல்லை, நான் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக எனது பயணத்தை இரத்து செய்யவில்லை.
 கடந்த வருடம் டிசம்பர் மாதம்  24ந் திகதி ஜனாதிபதி செயலகத்தால் எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்று எச்சரிக்கை செய்ததும் மற்றும் எனது பயணத்தை இரத்து செய்யும்படி ஆலோசனை வழங்கியது என்று சொல்லப்படுவதும் சரியான தகவல்தான். ஆனால் நான் அப்பொழுது  பயணத்தில் பாதிவரைக்கும் வந்துவிட்டேன் மற்றும் திரும்பிச் செல்ல விரும்பவில்லை.   / டிசம்பர் கடைசி வாரமும் மற்றும் ஜனவரி முதல் வாரமும் நாட்டை விட்டு வெளியே சென்றிருந்தேன், திரும்பி வந்தது முதல் நான் எனது வழக்கமான கடமைகளைச் செய்ய ஆரம்பித்திருந்தேன்”.
மேலும் பேசுகையில் சுமந்திரன் சொன்னது” என்ன நடந்தது என்றால், நான் திட்டமிட்டபடி ஜனவரி 13ல்கடல் நீர் சுத்திகரிப்பு பற்றிய கருத்தரங்கில்  கலந்து கொள்வதாகத்தான்  இருந்தேன்.
யாழ்ப்பாணத்துக்கான இந்தப் பயணத்தில் எனது மனைவியும் என்னுடன் உடன் வருவதாக இருந்தார்.
ஆனால் திடீரென ஜனவரி 11ல் மற்றொரு பிரச்சினை தோன்றியது, அது என்னை கொழும்பில் இருக்கும்படி நிர்ப்பந்தப் படுத்தியது.
இது ஒரு வழக்கறிஞர் என்கிற வகையில் நான் கையாழும் சில சட்டப் பிரச்சினைகள் தொடர்பானது மற்றும் அரசியலோ அல்லது பாதுகாப்பு காரணங்களோ சம்பந்தப்பட்டது அல்ல.
நான் கடல் நீர் சுத்திகரிப்பு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு வெகு ஆவலாக இருந்தேன் ஆனால் திட்டமிட்டபடி அதைச் செய்ய முடியவில்லை.
எனவே ஜனவரி 12ல் என்னால் வர இயலவில்லை என அதிகாரிகளுக்கு நான் அறிவித்து விட்டேன்.
இதுவரை  நான் கேள்விப்பட்டதில் இருந்து தெரிவது இந்தமுறை என்னை இலக்கு வைத்து அவர்கள் வெகு சிறப்பாக திட்டம் தயாராக்கி வைத்திருந்தார்களாம்.
அனால் கடைசி நிமிடத்தில் நான் பயணத்தை இரத்து செய்தது அவர்களது திட்டத்தை தகர்த்துவிட்டது போலத் தெரிகிறது” என்று.
அவதானிக்கும்போது இரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்செயலான திருப்பங்களால் ஏற்பட்ட நிகழ்வுகளால் அவரது உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் அவரது பாதுகாப்பை அதிகரிப்பதற்காக போதுமான வசதிகள் செய்யப் பட்டுள்ளனவா என நான் கேட்டேன்.
சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கா தன்னுடன் அது பற்றி தொடர்பு கொண்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த விடயம் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாகவும் மற்றும் நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தாராம்.
புதிதாக அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு முறை தற்போது அமலில் உள்ளதாக சுமந்திரன் சொன்னார்.  வெளிப்படையான  காரணங்களுக்காக அந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மேலும் விபரிக்கும்படி அவரிடம் நான் கேட்கவில்லை.
சுமந்திரன் மேலும் தெரிவித்தது ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க ஆகியோர் அவருடன் தொடர்பு கொண்டு தங்கள் கவலைகளை  தெரிவித்ததாகச் சொன்னார்.
தான் எப்படியோ பாதிக்கப் படாமல் தப்பியதற்கு பெரிய ஆறுதலை வெளியிட்ட பிரதம மந்திரி நகைச்சுவையாக “வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி  உங்கள் யாழ்ப்பாணப் பயணத்தை நீங்கள்  இரத்துச் செய்திருக்காவிட்டால் இன்று நீங்கள் உயிரோடிருந்திருக்க மாட்டீர்கள்” என்றும் சொன்னார்.
நிகழ்வுகளின் திருப்பம் பற்றிக் கவலை வெளியிட்ட ஜனாதிபதியும், தான் அச்சுறுத்தலில் இருந்தபோது அடைந்த  அனுபவங்களைப்பற்றி சுமந்திரனுடன விபரமாகப் பேசினாராம்.
“என்ன நடந்தாலும் யாழ்ப்பாணத்துக்கு செல்வதையும் உங்கள் கடமைகளைச் செய்வதையும் நீங்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” என்று ஜனாதிபதி சிறிசேன சுமந்திரனிடம் தெரிவித்தார்.
நான் முன்பைப்போல தொடர்ந்து வடக்கிற்கு போவேன்
இந்தக் கட்டத்தில்  நான் சுமந்திரனிடம் அவரது உயிருக்கு  ஆபத்து உள்ளது என்கிற உணர்வின் கண்ணோட்டத்தில் முன்பு செய்தது போல அவர் வடக்கிற்கு பயணம் செய்வாரா என்று கேட்டேன்.
அவரது பதில் கடுமையாக அதைக் குறிப்பிட்டது  “நான் தொடாந்து வடக்கிற்கு போவேன் மற்றும் கடந்த காலங்களில் செய்ததைப் போல நேரடியாக மக்களுடன் தொடர்பு கொள்வதை தொடர்ந்து செய்வேன்” என சுமந்திரன் பதிலளித்தார்.
பின்னர் நான், ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரிடம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் மற்றும் கிடைக்கப் பெற்ற தகவல்களின்  அடிப்படையில்   இந்த சதியில் வெளிநாட்டு புலிகளின் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறதாம் என்று கேட்டேன்.
எல்.ரீ.ரீ.ஈ யினை நாட்டில் புத்துயிர்ப்பிப்பதற்காக புலம்பெயர் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்டு வரும் முயற்சிகளின் மற்றொரு நடவடிக்கையா இது என்றும் நான் அவரிடம் கேட்டேன்.
பதிலளிப்பதில் எச்சரிக்கை   அடைந்த சுமந்திரன்  தெரிவிக்கையில்,  எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்   பெறுகிறதா அல்லது இல்லையா என்பதை இந்த விடயத்தைக் கொண்டு  ஒரு முடிவுக்கு வருவது  இந்த நேரத்தில் மிகவும் முதிர்ச்சியடையாத ஒரு முடிவு என்றார்.
தொடர்ந்து தெரிவிக்கையில் “ இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், நாட்டில் வாழும் தவறாக வழிநடத்தப்பட்ட சில முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் சில வெளிநாட்டு சக்திகள் வழங்கும் பணம் போன்ற சலுகைகளால் தூண்டப்பட்டு ஸ்ரீலங்கா மண்ணில் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நேரத்தில் இது என்னை இலக்கு வைத்து தூண்டப்பட்ட தனிப்பட்ட நடவடிக்கையா அல்லது எல்.ரீ.ரீ.ஈக்கு திரும்பவும் புத்துயிர் அளிப்பதற்காக  வடிவமைக்கப்பட்ட   விரிவான நடவடிக்கையின் ஒரு பகுதியா என்பதை இந்த நேரத்தில் எங்களால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. பாதுகாப்பு முகவர்கள் இதை மேலும் ஆராய்ந்து விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்”.
திரு. சுமந்திரன் கருதுவதுபோல ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினரை இலக்கு வைத்தது ஒரு தனியான விடயமா அல்லது மற்றொரு பரந்த முயற்சியான திரும்பவும்  ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியா என ஊகிப்பதற்கு இது வெகு சீக்கிரமான நேரம்.
முன்பு இதுபோன்ற பல முயற்சிகள் பற்றி இந்தப் பத்தியில் வெகு விரிவாக ஆராய்ந்துள்ளோம். மேலும் குழப்பமூட்டும் காரணம் என்னவென்றால்  ஸ்ரீலங்காவிலும் மற்றும்  வெளிநாட்டிலுமுள்ள எல்.ரீ.ரீ.ஈ சார்பான மூலகங்களால் சுமந்திரன் தீவிரமாக தூற்றப்பட்டும்  இழிவு படுத்தப்பட்டும் வருகிறார்.
துரோகி பட்டம் சூட்டுவது மற்றும் ஒருவரின் குணாதிசயத்தை கொலை செய்வதும் ஒரு நபரைக் கொல்வதற்கு முன்பும் பின்பும் எல்.ரீ.ரீ.ஈ மேற்கொள்ளும் நடைமுறையாகும். இந்தச செயல்வகை கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் படுகொலையில் அப்பட்டமான தெளிவாக உள்ளது.
இனங்களுக்கு இடையில் உள்ள இடைவெளிக்கு பாலம் அமைப்பதிலும் மற்றும் ஜனநாயக வழியில் தமிழர் உரிமைகளை மீளவும் உறுதிப்படுத்தும் முயற்சியிலும் சுமந்திரன் மிகவும் சாத்தியமான ஒரு பங்களிப்பை ஆற்றி வருகிறார்.
சமீப காலங்களில் அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் அரசியல் நிர்ணய சபையின் வழிகாட்டுக் குழுவில் ரி.என்.ஏ அங்கத்தவர் என்கிற தனது பதவி மூலமாகவும் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் காரியாலயத்தின் நிருவாகக் குழுவில் கலாநிதி ஜயம்பதி  விக்ரமரட்னவுடன்  இணைத் தலைவராகவும் இருந்து ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்கி வருகிறார்.
ஒரு முற்போக்கான அரசியலமைப்பை சட்டமாக்குவது ஒரு முக்கியமான சாதனை என பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது, அது உண்மையான நீதி, சமத்துவம் மற்றும் இன நல்லிணக்கம் என்பனவற்றை வரவேற்கும்.
இதன் விளைவாக இனப் பிளவின் இரண்டு பக்கத்திலுமுள்ள கழுகன்மார் கூட்டத்தினர் பல்வேறு காரணங்களுக்காக உத்தேச அரசியலமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வதில் ஒற்றுமையாக உள்ளார்கள்.
வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ மூலகங்கள் மற்றும் ஸ்ரீலங்காவுக்குள் இருக்கும் புலி சார்பான சக்திகள் என்பன சுமந்திரன்மீது தீவிரமான விரோதப் போக்கு உள்ளவர்களாக உள்ளனர் என்பது உறுதியான ஒரு உண்மை.
புலிகள் மற்றும் புலிகள் சார்பான ஊடக ஊதுகுழல்களால் அவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார். 2015 தேர்தல்களில் சுமந்திரனை தோற்கடிப்பதற்கு புலம்பெயர் புலிகள் பெருந்தொகையான பணத்தைச் செலவழித்தார்கள்.
சுமந்திரன் கணிசமான வெற்றியினைப் பெற்றார், ஆனால் வெளிநாட்டு புலிகளால் ஆதரிக்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போனறோர் மோசமாக தோற்றுப் போனார்கள்.
அதன்பின் புலிகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் மற்றும் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, மற்றும் சுவிஸ்லாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் சுமந்திரனை பகிரங்கமாக அவமானப்படுத்தி  துஷ்பிரயோகம்  செய்யும்   ஒரு பிரச்சாரத்தை நடத்தி வந்தார்கள். அந்த திட்டம் சுமந்திரனை அரசியலில் இருந்து வெளியேற வைப்பதுதான். இதுவும் கூட நடக்கவில்லை.
வாய்ப்பானது அதிர்ஸ்டம் அல்லது கடவுளால் வழங்கப்பட்ட முன்ஜாக்கிரதை
இந்த பின்னணியில் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ இப்போது தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு படுகொலை முயற்சியினூடாக சுமந்திரனை அழிக்கும் தெரிவை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதற்கு போதுமான அடித்தளம் உள்ளது.
இந்த கொலை முயற்சி பற்றி ஒரு விசாரணை தொடர்கிறது, மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்று இந்த விடயத்தில் அதிக வெளிச்சத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
இப்போது இந்த திட்டமிட்ட கொலை முயற்சி வெற்றியடையாமல் அல்லது பூர்த்தியாகாமல் போனதுக்கு நிகழ்வுகளின் தற்செயலான திருப்பங்கள்தான் வெறும் வாய்ப்பாக, அதிர்ஷ்டமாக அல்லது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட முன்ஜாக்கிரதையாக அமைந்தன என்பது வெளிப்படையாக தெரிகிறது.
மிகவும் முக்கியமாக சாத்தியமான கொலை முயற்சி பற்றி காவல்துறையினரை எச்சரிக்கையாக்கிய முன்னாள் புலி உறுப்பினர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் உயர்வான பாராட்டுக்குரியது.
அநியாயத்தை ஆதரிக்காது அதை தெரியப்படுத்தும் நல்லவன் போன்றவர்கள் பலமான பாராட்டுக்கு உரியவர்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக அவனது உண்மைப் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை வெளிப்படுத்த முடியாது.
நிச்சயமாக அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் நல்லவர்கள் உள்ளபடியால்தான் உலகம் ஒரு நல்ல இடமாக இன்னும் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையில் அவனுக்கு நல்லவன் எனகிற பெயரை நான் வழங்கியிருந்தேன்.
மூலம்:  தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்.

கருத்துகள் இல்லை: