புதன், 1 பிப்ரவரி, 2017

துரைமுருகன் ஜெயலலிதா என்று எப்படி கூறலாம்? அதிமுகவினர் கடும் கண்டனம் !

அ.தி.மு.க., - தி.மு.க., கடும் மோதல் சட்டசபையில் அரை மணி நேரம் அமளி சென்னை:சட்டசபையில், ஜெயலலிதா பெயரை கூறியது தொடர்பாக எழுந்த பிரச்னையால், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே, நேற்று கடும் மோதல் வெடித்தது. சபாநாயகரை முற்றுகையிட்டு, தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சபையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக, அமளி நிலவியது.அமைச்சர் ஜெயகுமார்: அ.தி.மு.க., ஆட்சியில் தான், இலங்கை அரசின் பிடியிலிருந்த, தமிழக மீனவர்களின், 347 படகுகள் மீட்கப்பட்டன. தி.மு.க., ஆட்சியில், ஒரு படகு கூட மீட்கப்படவில்லை.இதற்கு, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஜெயலலிதா என்று பேரைச் சொல்ல துரைமுருகனுக்கு என்ன தகுதியிருக்கிறது? என்று ஜெயக்குமார் கேட்கிறார். புரியவில்லை. ஒரு பெயரைச் சொல்ல என்ன தகுதி வேண்டும்? அப்படியே ஜெயக்குமாருக்கு இருக்கின்ற தகுதிகள், துரைமுருகனுக்கு என்ன இல்லாமல் போய்விட்டது? அடப் பாவிங்களா. எது எதுக்கோ வெளிநாட்டை உதாரணம் காட்டி பேசும் நீங்கள், வெளிநாட்டுக்கார்ர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், "மிஸ்டர் ......". என்று பெயரிட்டு அழைப்பதை ஏன் கடைபிடிக்க மாட்டேன் என்கிறீர்கள்? தமிழில், திரு, திருமதி. அல்லது அவர்கள் என்ற கூட சேர்த்துச்சொன்னால் சரிதானே பெயரையே சொல்லக்கூடாது என்பது என்ன நியாயம்? அதிமுக அடிமைகளுக்கு எவ்வளவு காலம் ஆனாலும் கூண் நிமிர முயற்சிக்க மாட்டார்களா?

முதல்வர் பன்னீர்செல்வம்: தி.மு.க., ஆட்சியில் தான், இலங்கைக்கு, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அதனால் தான், நமது மீன்பிடி எல்லை சுருங்கி விட்டது; இதனால், ஆழ்கடல் மீன் பிடிப்பை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வினர் எழுந்து எதிர்ப்பு ;
தி.மு.க., - துரைமுருகன்: கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது, எங்களுக்கு தெரியாமல் நடந்தது. ஆனால், வாஜ்பாய்க்கு, ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.ஜெயலலிதா பெயரை குறிப்பிட்டதற்கு, அ.தி.மு.க.,வினர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின், ஸ்டாலின் பேச எழுந்தபோது, அமைச்சர்கள் சிலர் பதில் அளிக்க முற்பட்டனர். அதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, உரத்த குரலில் பேசினர்.முதல்வர்: எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, அமைச்சர்கள் விளக்கம் அளிக்கலாம். அதில் தவறு இல்லை.
2006 - 11ல், முன்னாள் முதல்வர் பேசும்போது, நீங்கள், 32தடவை குறுக்கிட்டீர்கள்.அதற்கு, தி.மு.க.,வினர் ஏதோ கூற, பதிலுக்கு அ.தி.மு.க.,வினரும் ஆவேசமாக பதில் அளித்தனர்.
சபாநாயகர்: ஆரோக்கியமான விவாதம் நடக்கிறது. அதற்கு, அமைச்சர் பதில் சொல்ல வேண்டியுள்ளது. அது, மரபுப்படி தவறு அல்ல.ஸ்டாலின்: குறுக்கீடுகளை தவிர்க்கவே, முதல்வர் பதிலுரை அளிக்கும் நாளில், உரையாற்ற அனுமதி கோரினேன்.துரைமுருகன்: குறுக்கிடுவது மரபு என்றால், முதல்வர், நாளை பேசும்போது, நாங்கள் குறுக்கிட்டு பேசுவோம். அதற்கு, அனுமதி தருவீர்களா?
சபையில் கூச்சல்
சபாநாயகர்: அமைச்சர்கள் மட்டும் தான் குறுக்கிட்டனர்; உறுப்பினர்கள் பேசவில்லை.
அப்போது ஜெயக்குமார் எழுந்து, 'ஜெயலலிதா என சொல்ல, துரைமுருகனுக்கு என்ன தகுதி உள்ளது' என்றார். இதனால், கோபம் அடைந்த ஸ்டாலின், அதற்கு பதில் அளிக்க எழுந்தார். சபையில் கூச்சல் நிலவியதால், அவரால் பேச முடியவில்லை.
பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா, எ.வ.வேலு உள்ளிட்ட பல தி.மு.க.,வினர் கோபமுற்று, சபையின் முன்பக்கம் ஓடி வந்தனர். அப்போது, தி.மு.க., உறுப்பினர்கள் கைகளை பலமாக தட்டி, கேள்வி எழுப்பினர்.பதிலுக்கு, அ.தி.மு.க.,வினரும் கைதட்டினர்.
சபாநாயகர், எவ்வளவோ கேட்டும், இரு தரப்பும் அமைதி காக்கவில்லை. வேலு, ஆஸ்டின் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட தி.மு.க., உறுப்பினர்கள், சபாநாயகரை முற்றுகையிட்டனர்.பதிலுக்கு, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சில அமைச்சர்கள், ஆக்ரோஷமாக பேசினர். தி.மு.க.,வினரும், பதிலுக்கு அவதுாறான வார்தைகளை கூறினர்.< அதற்கு பதிலடியாக, சில அ.தி.மு.க.,வினரும் சைகைகளை காட்டினர். இதனால், சபையில் கடும் அமளி நிலவியது. சுமார், 30 நிமிடங்களுக்கு மேல் இது நீடித்தது.

சபாநாயகர்: தி.மு.க., உறுப்பினர்கள் இருக்கைக்கு போங்கள். அமைச்சர் சண்முகம், நீங்கள் என்னைப் பார்த்து பேசாமல், அவர்களை பார்த்து பேசுவதால், பிரச்னை உண்டாகிறது. சேகர்பாபு, இருக்கைக்கு செல்லுங்கள்.
ஸ்டாலின்: துரைமுருகன், பெயரைச் சொன்னதற்காக அவரை...முதல்வர் (குறுக்கிட்டு): இப்பிரச்னையை விட்டு விடுங்கள்.இவ்வாறு விவாதம் நடந்தது.


'பாடி லாங்க்வேஜ் நீக்குங்க!'

சட்டசபையில், தி.மு.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்த சிலர், வரம்பு மீறிய வகையில் நடந்து கொண்டனர். சபை விதிக்கு புறம்பாக, தவறான சைகைகளை காட்டினர். பின் பேசிய முதல்வர், ''அந்த, 'பாடி லாங்க்வேஜ்'களை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். வரம்பு மீறியவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு சபாநாயகர், ''அரை மணி நேரமாக, இரு தரப்பினரும் வரம்பு மீறி நடந்து கொண்டீர்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இனி அப்படி நடக்காமல் இருக்க, தவறு இழைத்தோர் மீது, நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: